நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இந்தப் தொடர் வரும் 26 ஆம் தேதி வரையில் நடக்கிறது. 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடக்கிறது. 10 அணியும் குரூப் ஏ, குரூப் பி என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் 4 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதன் பிறகு 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுகளில் போட்டி போடும்.

வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி நடந்து பழகும் ரிஷப் பண்ட்!

குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும் உள்ளன. முதல் போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று நடந்த 2ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பெண்கள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா 400 ரன்களுக்கு ஆல் அவுட்: அக்‌ஷர், ஷமி அதிரடியால் 223 ரன்கள் முன்னிலை!

இதைத் தொடர்ந்து நேற்று 3ஆவது டி20 போட்டி நடந்தது. இதில், நியூசிலாந்து பெண்கள் அணியும், ஆஸ்திரேலியா பெண்கள் அணியும் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா பெண்க அணியில் தொடக்க வீராங்கனை ஹேலே 55 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த லேனிங் 41 ரன்கள் எடுத்தார். பெர்ரி 40 ரன்கள் எடுக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இறுதியாக ஆஸ்திரேலியா பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் பந்து வீச்சில் தகுகு 3 விக்கெட் கைப்பற்றினார். பின்னர், 174 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட நியூசிலாந்து பெண்கள் அணியில் ஒவ்வொரு வீராங்கனையும், 0, 0, 9, 1, 10 என்று எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அமெலியா கேர் மட்டும் அதிகபட்சமாக 21 ரன்கள் எடுத்தார். இறுதியாக நியூசிலாந்து பெண்கள் அணி 14 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்கள் மட்டுமே எடுத்து 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

புது போன் தொலைந்த கடுப்பில் விராட் கோலி - கூலா ஐஸ்கிரீம் சாப்பிட்டா சரியாகிடும்: கலாய்த்த சொமேட்டோ!

இன்று நடக்கும் 4ஆவது போட்டியில் இந்தியா பெண்கள் அணியும், பாகிஸ்தான் பெண்கள் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.