புது போன் தொலைந்த கடுப்பில் இருக்கும் விராட் கோலியை சொமேட்டோ நிறுவனம் பதில் அளித்து கோலியை கலாய் கலாய் என்று கலாய்த்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஓய்வில் இருந்த விராட் கோலி உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் சென்று அங்குள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், ரிஷிகள், முனிவர்களுக்கு உணவளித்தனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தான், விராட் கோலி தான் வாங்கிய மொபைல் போன் தொலைந்து போனது குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இருப்பதிலேயே சோகமான விஷயம் என்னவென்றால், புது போனை திறந்து பிரித்து கூட பார்க்காமல் பறிகொடுப்பது தான். யாராவது அதை பார்த்தீர்களா? என்று பதிவில் கூறியிருந்தார்.
அடுத்தடுத்து அவுட்டான கோலி, சூர்யகுமார் யாதவ்: அறிமுக போட்டியிலேயே சொதப்பிய ஸ்கை!
இதன் மூலம் விராட் கோலி புதிய செல்போனை தொலைத்துவிட்டார் என்று தெரிகிறது. இது குறித்து சொமேட்டோ நிறுவனம் அளித்த பதில் கோலியை மேலும் கடுப்பாக்கியுள்ளது. கவலை வேண்டாம் கோலி, உங்களது மனைவி செல்போனில் ஐஸ் க்ரீம் ஆர்டர் செய்து நீங்களும், உங்களது மனைவியும் சேர்ந்து சாப்பிடுங்கள். எல்லாம் கூலாகிவிடும் என்று பதிவிட்டு இருந்தது. இந்த டுவீட் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பார்டர் கவாஸ்கர் டிராபியில் முதல் சதம்: ஸ்டீவ் ஸ்மித் சத சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 12 ரன்கள் எடுத்து உணவு இடைவேளைக்கு பிறகு வந்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
