கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் வீடு திரும்பிய நிலையில், வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி நடக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மும்பையில் உள்ள கோகிலாபெண் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். முழங்கால் பகுதியில் அறுவை சிகிசை மேற்கொள்ளப்பட்டது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியிலேயே இலங்கை த்ரில் வெற்றி!

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வந்தார். இன்னும் 2 வாரங்களில் வீடு திரும்புவார், ஆனால், காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு இன்னும் 2 மாதங்களுக்கு மேல் ஆகும் என்று சொல்லப்பட்டது. தசைநார்களில் பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தசைநார்கள் அதிகளவில் காயம் அடைந்திருந்தன. கவலைக்கு இதுவே அதிக காரணமாகவும் இருந்தது. தற்போது தசைநார்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இனிமேல் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபியில் முதல் சதம்: ஸ்டீவ் ஸ்மித் சத சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!

கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ரிஷப் பண்ட் வெளியில் அமர்ந்து காற்றை சுவாசிப்பது ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி வெளியில் நடந்து வந்தார். அதோடு தனது புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு ஒரு படி முன்னே... ஒரு படி வலிமையாக... ஒரு படி மேன்மையாக என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து அவுட்டான கோலி, சூர்யகுமார் யாதவ்: அறிமுக போட்டியிலேயே சொதப்பிய ஸ்கை!

Scroll to load tweet…