இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

கான்பெராவில் இன்று நடக்கும் 2வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கியுள்ளன.

இதையும் படிங்க - பிசிசிஐ தலைவர் பதவி விவகாரம்..! கங்குலியை வைத்து அரசியல் செய்யும் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்தியாவிற்கு எதிரான டி20 தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆகிய போட்டிகளில் கேமரூன் க்ரீன் தொடக்க வீரராக இறங்கிய நிலையில், டி20 உலக கோப்பை நெருங்குவதால், அதில் தொடக்க ஜோடியாக இறங்கும் வார்னர் - ஃபின்ச் ஆகிய இருவரும் இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக ஆடுகின்றனர். அதனால் கேமரூன் க்ரீன் இந்த போட்டியில் ஆடவில்லை. 

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிங்க - பட்லர் கூறிய காரணம், மேத்யூ வேடின் செயலை விட மட்டமா இருக்கு..! பயந்தாங்கோலி பட்லர்

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், மொயின் அலி, சாம் கரன், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி.