Asianet News TamilAsianet News Tamil

பட்லர் கூறிய காரணம், மேத்யூ வேடின் செயலை விட மட்டமா இருக்கு..! பயந்தாங்கோலி பட்லர்

மார்க் உட்டை கேட்ச் பிடிக்க விடாமல் கையை நீட்டி தடுத்த மேத்யூ வேடுக்கு எதிராக அம்பயரிடம் அப்பீல் செய்யாதது ஏன் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறிய காரணம், மேத்யூ வேடின் செயலைவிட மட்டமாக இருக்கிறது.
 

jos buttler pathetic reason for not appealing against matthew wade who obstruct the fielder in australia vs england first t20
Author
First Published Oct 10, 2022, 5:39 PM IST

டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது. பெர்த்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் (68) மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸின் (84) அதிரடியால் 20 ஓவரில் 208 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

209 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் அதிரடியாக பேட்டிங்  ஆடி 44 பந்தில் 73 ரன்களை குவித்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 15 பந்தில் 35 ரன்களை விளாசினார். ஆனாலும் ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 200 ரன்கள் மட்டுமே அடித்து இலக்கை எட்டமுடியாமல் 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க - என்னால் ஈசியா சிக்ஸர் அடிக்க முடியும்.. நான் ஏன் சிங்கிள் எடுக்கணும்..? இஷான் கிஷன் துணிச்சல் பேச்சு

இந்த போட்டியில் மேத்யூ வேட் படுமட்டமாக நடந்துகொண்டார். பொதுவாக ஆஸ்திரேலியர்கள் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் மேத்யூ வேட். 

இன்னிங்ஸின் 17வது ஓவரை மார்க் உட் வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தை பவுன்ஸராக வீசினார் மார்க் உட். அதை வேட் அடிக்க, பந்து அங்கேயே உயரே எழும்பியது. விக்கெட் கீப்பர் பட்லர் மற்றும் பவுலர் மார்க் உட் இருவருமே அந்த பந்தை கேட்ச் பிடிக்க ஓடிவந்தனர். பந்து எங்கே சென்றது என்பதை அறியாத வேட் ரன் ஓட முயற்சித்து இரண்டு அடி முன்னே சென்றார். பின், மார்க் உட் ஓடிவருவதை பார்த்து, மீண்டும் க்ரீஸை நோக்கி ஓடிவந்தார். அப்போது மார்க் உட் ஏதோ ஒருவகையில் தன்னை அவுட்டாக்க(கேட்ச் பிடிக்கத்தான் வருகிறார் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை) ஓடிவருகிறார் என்பதை தெரிந்துகொண்டு கையை நீட்டி மார்க் உட்டை மறைத்தார்.

இதையடுத்து பட்லர், மார்க் உட் உட்பட மொத்த இங்கிலாந்து அணியும் அதிருப்தியடைந்தது. ஆனால் அம்பயரிடம் அப்பீல் செய்யவில்லை. ஒருவேளை அப்பீல் செய்திருந்தால் விதிப்படி வேட் அப்போதே ஆட்டமிழந்திருப்பார்.  ஆனால் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அப்பீல் செய்யவில்லை.

அதற்கான காரணம் அவரிடம் கேட்கப்பட்டபோது, அதுகுறித்து பேசிய ஜோஸ் பட்லர், என்ன நடந்தது என்று எனக்கும் தெளிவாக தெரியவில்லை. என்னை அப்பீல் செய்ய சொன்னார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் நீண்டகாலம் இருந்து ஆடப்போகிறோம். இப்போதே இதற்கு அப்பீல் செய்தால் மொத்த டிரிப்பும் கஷ்டமாகிவிடும். இப்போதே ஆஸ்திரேலிய ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பவில்லை என்று ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.

பட்லர் கூறிய இந்த காரணம், மேத்யூ வேடின் செயலை விட மட்டமாக இருந்தது. அண்மையில், மகளிர் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா மன்கட் ரன் அவுட் செய்தபோது, ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் என்று பிதற்றிய இங்கிலாந்து கிரிக்கெட்டர்கள், மேத்யூ வேட் விஷயத்தில் மௌனம் காத்தனர்.

இதையும் படிங்க - ஷ்ரேயாஸ் ஐயர் அபார சதம்.. அபாரமாக ஆடி சதத்தை தவறவிட்ட இஷான் கிஷன்! 2வது ODI-யில் இந்தியா அபார வெற்றி

ஜோஸ் பட்லரின் கருத்து குறித்து டுவீட் செய்த இந்திய முன்னாள் ஜாம்பவான் வெங்கடேஷ் பிரசாத், பரிதாபம்.. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், மேத்யூ வேட் செய்தது முழுக்க முழுக்க ஒரு ஏமாற்றுவேலை. அவருக்கு எதிராக அப்பீல் செய்யாததற்கு பட்லர் கூறிய காரணம், அதைவிட மோசம் என்று வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios