Asianet News TamilAsianet News Tamil

2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணியின் உத்தேச ஆடும் லெவன்! ஸ்மித் கேப்டன்.. கம்மின்ஸுக்கு மாற்றுவீரர் அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

australia team probable playing eleven for the second test against west indies
Author
First Published Dec 7, 2022, 10:33 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

நாளை அடிலெய்டில் தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்வதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை வலுப்படுத்தும் விதமாகவும் வெற்றி பெறும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்குகிறது.

கிரிக்கெட்டை விட குடும்பம் தான் எனக்கு முக்கியம்; மீண்டும் அசிங்கப்பட தயாரா இல்ல! மனுவை வாபஸ் பெற்றார் வார்னர்

முதல் போட்டியின்போது காயமடைந்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 2வது டெஸ்ட்டில் ஆடவில்லை. எனவே ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி செய்கிறார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன்சிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த ஸ்மித்தின் தடைக்காலம் இரண்டரை ஆண்டுக்கு முன்பே முடிந்துவிட்டதால், கம்மின்ஸ் காயத்தால் ஆடமுடியாத சூழலில் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தவுள்ளார்.

பாட் கம்மின்ஸுக்கு மாற்று வீரராக ஸ்காட் போலந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். 33 வயதான ஸ்காட் போலந்த், இதுவரை ஆஸ்திரேலியாவிற்காக 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். கம்மின்ஸுக்கு பதிலாக போலந்த் ஆடுவதை தவிர, ஆஸ்திரேலிய அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது.

காயத்துடன் களமிறங்கிய ரோஹித் அரைசதம்.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்

2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலந்த், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios