வார்னர், ஸ்மித் அதிரடி: முதல் நாளில் ஆஸி, 339 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

Australia Scored 339 Runs against England in Day 1 in Ashes 2nd Test Match

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி தற்போது ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது.

ஜடேஜா எல்லா போட்டியிலும் விளையாடினால் அவர் தான் அதிக விக்கெட் எடுப்பார் – முத்தையா முரளிதரன்!

இதில் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் ஆஸி அணியின் ரன் கணக்கை தொடங்கினர். முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

சாய் கிஷோர், விஜய் சங்கர் அதிரடியால் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 173 ரன்கள் குவிப்பு!

அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிட் ஹெட் இருவரும் ஜோடி சேர்ந்தனர். ஒரு கட்டத்தில் டிராவிஸ் ஹெட் 77 ரன்களாக எடுத்திருந்த போது ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழ்ந்தார். அதன் பிறகு வந்த கேமரூன் க்ரீன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

ஒருபுறம் நிதானமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்கள் எடுத்திருந்த போது அதிவேகமாக 9000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். அதன் பிறகு அரைசதம் அடித்தார். தற்போது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. இதில், ஸ்மித் 85 ரன்களும், அலெக்ஸ் கேரி 11 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

புதிதாக அமைக்கப்பட்ட அவுட்பீல்டில் 5 முக்கியமான போட்டிகள் - இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் ஹேப்பி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios