Asianet News TamilAsianet News Tamil

வெறும் 59 ரன்னுக்கு 8 விக்கெட்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2ஆவது முறையாக மோசமான சாதனை படைத்த ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 59 ரன்னுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து 2 ஆவது முறையாக குறைந்த ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது.
 

Australia lost 8 wickets for just 59 runs and this is lowest first innings total against India
Author
First Published Mar 17, 2023, 6:52 PM IST

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 59 ரன்னுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து 2 ஆவது முறையாக குறைந்த ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி தற்போது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா புத்திச்சாலித்தனமாக பந்து வீச்சு தேர்வு செய்தார். 

அயர்லாந்து புறப்படும் இந்திய அணி: 3 டி20 போட்டி ரெடி; எப்போது தெரியுமா?

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டை 5 ரன்களுக்கு 2வது ஓவரிலேயே வீழ்த்தினார் முகமது சிராஜ். அதன்பின்னர் மிட்செல் மார்ஷும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர்.  ஸ்மித் 22 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார். 

கலைஞர் எம் கருணாநிதி ஸ்டாண்டுகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

லபுஷேனும் 15 ரன்களில் குல்தீப் யாதவின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சீட்டுக்கட்டாய் சரிந்தது. ஜோஷ் இங்லிஸ்(26), கேமரூன் க்ரீன்(12), ஸ்டோய்னிஸ்(5) ஆகிய மூவரும் ஷமியின் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 8 ரன்னுக்கு ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழக்க, சீன் அபாட்(0) மற்றும் ஆடம் ஸாம்பா(0) ஆகிய இருவரும் டக் அவுட்டாக, 35.4 ஓவரில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.

முதல் முறையாக ODI கேப்டனான ஹர்திக் பாண்டியா: எதிர்காலம் எப்படி? ஒரு கேப்டனாக டி20 போட்டியில் படைத்த சாதனைகள்!

இதில், 12.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, அடுத்த 59 பந்துகளில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் எடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2ஆவது முறையாக இந்திய அணிக்கு எதிராக குறைந்தபட்ச ரன் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக 159 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கழுத்தில் சிவப்பு துணி, நடுவில் மனைவி, மச்சான் கல்யாணத்துல குத்தாட்டம் போட்ட ரோகித் சர்மா: வைரலாகும் வீடியோ!

Follow Us:
Download App:
  • android
  • ios