AUS vs PAK: 2023 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் 19, 29 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்த ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 367 ரன்கள் குவித்தது. இதில், 19 சிக்ஸர்கள் மற்றும் 29 பவுண்டரிகள் அடித்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 18ஆவது லீக் போட்டி தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டிற்கு 259 ரன்கள் குவித்தனர். இன்று தனது 32 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 10 பவுண்டரி 9 சிக்ஸர்கள் உள்பட 121 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பிறந்தநாளன்று சதம் அடித்ததன் மூலமாக இதற்கு முன்னதாக பிறந்தநாளில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இதே போன்று டேவிட் வார்னர் இன்று தனது 21ஆவது ஒருநாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். அதோடு தொடக்க வீரராக சர்வதேச போட்டிகளில் 47 சதங்கள் அடித்துள்ளார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 4 முறை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும், உலகக் கோப்பையில் அதிக முறை சதம் விளாசியவர்களின் பட்டியலிலும் இணைந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியதன் மூலமாக உலகக் கோப்பையில் 5ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். தொடக்க வீரர்கள் இருவரும் சதம் விளாசியுள்ளனர். மேலும், அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியா அணிக்காக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தவர்களில் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இணைந்துள்ளனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 259 ரன்கள் குவித்துள்ளனர். இந்த நிலையில் தான் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்த அணிகளில் ஆஸ்திரேலியா இடம் பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக தற்போது ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது.
டேவிட் வார்னர் 14 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உள்பட 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 10 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உள்பட 121 ரன்களும் எடுத்துள்ளனர். மேலும், ஸ்டோய்னிஸ் ஒரு சிக்ஸர் அடிக்கவே ஆஸ்திரேலியா மொத்தமாக 19 சிக்ஸர்கள் மற்றும் 29 பவுண்டரிகள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை அணி இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்:
25 – இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான், மான்செஸ்டர், 2019
19 – வெஸ்ட் இண்டீஸ் vs ஜிம்பாப்வே, கான்பெர்ரா, 2015
19 - ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், பெங்களூரு, 2023
18 – தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து, பாஸ்டெர்ரே, 2007
18 -இந்தியா vs பெர்முடா, போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2007
உலகக் கோப்பை இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்:
17 – இயான் மோர்கன் (இங்கிலாந்து) vs ஆப்கானிஸ்தான், மான்செஸ்டர், 2019
16 – கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) vs ஜிம்பாப்வே, கான்பெர்ரா, 2015
11 – மார்ட்டின் குப்தில் (நியூசிலாந்து) vs வெஸ்ட் இண்டீஸ், வெல்லிங்டன், 2015
9 - டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) vs ஜிம்பாப்வே, ஹாமில்டன், 2015
9 – டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) vs பாகிஸ்தான், பெங்களூரு, 2023
9 – மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) vs பாகிஸ்தான், பெங்களூரு, 2023
இதற்கு முன்னதாக 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் தலா 8 சிக்ஸர்கள் விளாசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- AUS vs PAK
- AUS vs PAK Live
- AUS vs PAK Live Match World Cup
- AUS vs PAK Live Streaming
- Australia
- Australia vs Pakistan
- Australia vs Pakistan 18th Match
- Australia vs Pakistan Live
- Australia vs Pakistan World Cup
- Australia vs Pakistan World Cup 18th Match
- Australia vs Pakistan World Cup 2023
- Babar Azam
- Bengaluru
- CWC 2023
- ICC Cricket World Cup 2023
- ICC Cricket World Cup 2023 schedule
- ICC World Cup 2023
- M.Chinnaswamy Stadium
- Pakistan
- Pat Cummins
- Watch AUS vs PAK Live
- World Cup 2023 fixtures
- World Cup AUS vs PAK Venue
- World Cup Cricket Live Scores
- cricket world cup 2023 news
- cricket world cup tickets