Asianet News TamilAsianet News Tamil

IND vs AUS: மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் அதிரடி அரைசதம்.. வெறும் 11 ஓவரில் இலக்கை அடித்து ஆஸி., அபார வெற்றி

இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெறும் 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.
 

australia chased target just by 11 overs beat india in second odi and level the series by 1 1
Author
First Published Mar 19, 2023, 5:43 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ஆடுவதால் இஷான் கிஷன் நீக்கப்பட்டார். மேலும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூருக்கு பதிலாக ஸ்பின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஷர்துல் தாகூருக்கு பதிலாக அக்ஸர் படேலை சேர்த்தது ஏன்? இது உலக கோப்பைக்கான திட்டம்.. கேப்டன் ரோஹித் ஓபன் டாக்

ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபாட், நேதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ரன்னே அடிக்காமல் மிட்செல் ஸ்டார்க்கின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித் சர்மா(13), சூர்யகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல் (9) ஆகியோரும் மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் வீழ்ந்தனர். முதல் போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். 

ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழக்க, 49 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. நிலைத்து நின்று ஆடி 31 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்த கோலியும் சீன் அபாட்டின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேற 71 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. ஜடேஜா 16 ரன்களுக்கு நேதன் எல்லிஸின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அக்ஸர் படேல் ஒருமுனையில் நிற்க, மறுமுனையில் குல்தீப் யாதவ் (4), முகமது ஷமி(0), முகமது சிராஜ்(0) ஆகிய மூவரும் ஆட்டமிழக்க, 26 ஓவரில் வெறும் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி. அக்ஸர் படேல் 29 ரன்கள் அடித்தார்.

அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் 9வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். 

ஐபிஎல்லில் இருந்து விலகிய ஆர்சிபி வீரர்.! ஏலத்தில் நம்பி எடுத்து ஏமாந்த ஆர்சிபி.. மாற்று வீரர் அறிவிப்பு

118 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் இணைந்து தொடக்கம் முதலே இந்திய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்தனர். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய மிட்செல் மார்ஷ் 28 பந்தில் அரைசதம் அடிக்க, டிராவிஸ் ஹெட் 29 பந்தில் அரைசதம் அடித்தார். மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 66 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 30 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும் விளாச, 11  ஓவர்களில் இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios