நடப்பு சாம்பியனின் பரிதாப நிலை – 6ஆவது போட்டியிலும் தோல்வி – இங்கிலாந்து வெளியேற்றம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 36ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்து உலகக் கோப்பை தொடரிலிந்து 2ஆவது வெளியேறியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 36ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். ஆனால், இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்கள், மார்னஷ் லபுஷேன் 71 ரன்களும், கேமரூன் க்ரீன் 47 ரன்களும் எடுக்கவே ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியின் பவுலிங்கைப் பொறுத்த வரையில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மார்க் வுட் மற்றும் அடில் ரசீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஜானி பேர்ஸ்டோவ் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 13 ரன்னில் வெளியேற டேவிட் மலான் நிதானமாக விளையாடிய அரைசதம் அடித்தார். அவர் 64 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் 1 ரன்னில் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக விளையாடி 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Pakistan vs New Zealand: மழையால் ஓவர்கள் குறைப்பு – பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் வெற்றி இலக்கு!
அதன் பிறகு வந்த மொயீன் அலி 42 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 32 ரன்னிலும் வெளியேற டேவிட் வில்லி 15, அடில் ரசீத் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலமாக விளையாடிய 7 போட்டிகளில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 6 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் 2ஆவது அணியாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
இதற்கு முன்னதாக வங்கதேச அணி தொடரிலிருந்து வெளியேறியிருந்தது. வரும் 8ஆம் தேதி நெதர்லாந்து அணியையும், 11ஆம் தேதி பாகிஸ்தான் அணியையும் இங்கிலாந்து எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசல்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.