IND vs AUS: முடிஞ்சா அடிச்சிப் பாருன்னு டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா: இந்தியாவிற்கு 444 ரன்கள் வெற்றி இலக்கு!

இந்தியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

Australia announced declared and gives 444 runs for india to win in WTC Final 2023, Oval

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது.

ஒரு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பூஜ்ஜியம்: பாக், முன்னாள் வீரர் பாசித் அலி!

பின்னர் ஆடிய இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 48 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் ஜடேஜா ஓவரில் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் 121 ரன்கள் எடுத்த ஸ்மித், 2ஆவது இன்னிங்ஸில் 34 ரன்களில் வெளியேறினார்.

விரல் வீங்கியிருந்தாலும் தன்னலமற்று விளையாடிய உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – ரஹானே மனைவி உருக்கம்!

இதே போன்று டிராவிஸ் ஹெட்டும் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2அவது இன்னிங்ஸில் 18 ரன்களில் வெளியேறினார். இறுதியாக 3ஆவது நாளில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் லபுஷேன் மற்றும் கேமரூன் க்ரீன் இருவரும் 4ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில், லபுஷேன் 41 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு க்ரீன் 25 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.

பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை 2023 ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் பவுண்டரியாக அடிக்க ஆஸ்திரேலியா அதிக ரன்கள் குவித்தது. இதில், ஸ்டார்க் 7 பவுண்டரிகள் உடன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் 5 ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா 270 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக மொத்தமாக 443 ரன்கள் எடுத்தது. இந்தியாவிற்கு 444 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Ind vs Aus, WTC Final Day 4: மழை பெய்ய வாய்ப்பு: போட்டி பாதிக்கப்படுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios