Asianet News TamilAsianet News Tamil

உடல் நலம் பாதித்தும் சாதித்து காட்டிய கோலி: மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் 186 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், அவரது மனைவி அனுஷ்கா சர்மா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Anushka Sharma Reveals her statement about Virat Kohli scored 186 Runs
Author
First Published Mar 13, 2023, 11:39 AM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. இதில், உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், ரோஹித் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாராவும் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் நிலைத்து ஆடி சதமடித்த கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். 128 ரன்களுக்கு கில் ஆட்டமிழந்தார்.

21 வருடத்திற்கு பிறகு நிறைவேறிய 7 வயசு ஆசை: ரஜினியை சந்தித்து மகிழ்ந்த சஞ்சு சாம்சன்!

ஜடேஜா 28 ரன்கள் மட்டுமே அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய கேஎஸ் பரத் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடிய விராட் கோலி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை விளாசினார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் இது கோலியின் 75வது சதம்.

கோலியுடன் 6வது விக்கெட்டுக்கு இணைந்த அக்ஸர் படேல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 79 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர் அஷ்வின் (7), உமேஷ் யாதவ் (0) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். 

சுத்தியல், ஆணி, டூல்ஸ் பாக்ஸோடு விராட் கோலியை ஒப்பிட்ட வாசீம் ஜாஃபர்: ஏன், எதற்கு தெரியுமா?

ஒரு கட்டத்தில் இரட்டை சதத்தை நெருங்கி கொண்டிருந்த விராட் கோலி, ஷமி மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு ரன்னாக எடுத்திருந்தால் அவர் இரட்டை சதம் அடித்திருக்கலாம். அவர், இரட்டை சதம் அடிக்க கூடாது என்பதற்காகவே ஃபீல்டர்களை பவுண்டரி எல்லையில் நிறுத்தி பவுண்டரியை தடுத்து, இரட்டை சதம் அடிக்கவிடாமல் ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தடுத்தார்.

கோலியின் இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் அனுபத்தை பயன்படுத்தி விளையாடியிருக்கலாம். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாக நிலைத்து நின்று ஆடி தூக்கி அடிக்காமல் விளையாடிய அவர் இன்னும் 14 ரன்கள் தூக்கி அடிக்காமல் விளையாடியிருக்கலாம் என்பது ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் ஜடேஜா களமிறங்க காரணம் என்ன? வெளியான உண்மை தகவல்!

அதிக நேரம் நிலைத்து ஆடியதாலும், வெயிலின் தாக்கத்தாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து அவருக்கு காலில் வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அணி மருத்துவர்கள் விராட் கோலிக்கு சிகிச்சை அளித்தார்கள். இந்த நிலையில், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா சமூக வலைதளத்தில் பதிவை போட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: உடல்நலம் பாதிப்பையும் மீறி விளையாடி வருவதாகவும் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் மனிதனாகவும் விராட் கோலி இருக்கிறார் என்று அவர் எழுதியுள்ளார். 4ஆவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிங் எப்போதும் கிங் தான்: 1207 நாட்களுக்குப் பிறகு 75ஆவது சதம் அடித்து சாதனை படைத்த விராட் கோலி!

Follow Us:
Download App:
  • android
  • ios