நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பையின் 45ஆவது லீக் போட்டியில் விராட் கோலி பவுலிங் செய்து விக்கெட் கைப்பற்றிய சந்தோஷத்தை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார்.
உலகக் கோப்பையில் கடைசி லீக் போட்டி தற்போது பெங்களூரு மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு டாப் 5 பேட்ஸ்மேன்களும் அரைசதம் விளாசி சாதனை படைத்தனர். 48 ஆண்டுகால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியில் டாப் 5 வீரர்கள் முதல் முறையாக அரைசதம் அடித்துள்ளனர்.
சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு பணம் கொடுத்து உதவிய ஆப்கன் கிரிக்கெட் வீரர் குர்பாஸ்!
சுப்மன் கில் 51, ரோகித் சர்மா 51, விராட் கோலி 51, கேஎல் ராகுல் 102 மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் 128 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர். கடைசியாக 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு முகமது சிராஜ் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இரண்டாவது ஓவரின் 3ஆவது பந்திலேயே தொடக்க வீரர் வெஸ்லி பாரேஸி விக்கெட்டை கைப்பற்றினார்.
இவரைத் தொடர்ந்து கொலின் அக்கர்மேன் களமிறங்கினார். அவர் நிதானமாக விளையாடினார். எனினும் அவர் 35 பந்துகளில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் ஓடவுட் 30 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் கிளீன் போல்டானார்.
இந்த நிலையில் தான் இந்த உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக விராட் கோலி பந்து வீசினார். வங்கதேச அணிக்கு எதிரான 17ஆவது லீக் போட்டியின் போது ஹர்திக் பாண்டியா 3 பந்துகள் வீசிய நிலையில், கணுக்கால் பகுதியில் காயமடைந்த நிலையில், வெளியேறினார். இதையடுத்து அவருக்குப் பதிலாக எஞ்சிய 3 பந்துகளை விராட் கோலி வீசினார்.
போட்டியின் 23 ஆவது ஓவரை வீசிய விராட் கோலி அந்த ஓவரில் மட்டும் 0 1 1 0 1 4 என்று மொத்தமாக 7 ரன்கள் கொடுத்தார். கடைசி பந்தில் ஸ்லிப்பில் பீல்டர் நின்றிருந்தால் விக்கெட் எடுத்திருப்பார். ஆனால், இல்லையே. எனினும், கோலி 25 ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 3 ஆவது பந்தில் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு டி20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் முறையாக விராட் கோலி பந்து வீசினார். முதல் பந்தை வைடாக வீசவே, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த தோனி பந்தை பிடித்து பேட்டிங் செய்த கெவின் பீட்டர்சனை ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
போதும் நீங்க விளையாடி கிழிச்சது – ஓரங்கப்பட்டப்பட்ட ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட்!
இதையடுத்து விராட் கோலி கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டி உலகக் கோப்பையில் பந்து வீசினார். இதில், ஒரு விக்கெட் கைப்பற்றினார். அதன் பிறகு தற்போது தான் விராட் கோலி விக்கெட் கைப்பற்றியிருக்கிறார். இந்தப் போட்டியில் விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
India vs Netherlands: 30 பந்துகளில் 50 ரன்கள் – சுப்மன் கில்லிற்கு பாராட்டு தெரிவித்த விராட் கோலி!
இந்த விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து வீரர் பிராண்டன் மெக்கல்லம் விக்கெட்டை வீழ்த்தினார். இதற்கு முன்னதாக, அலாஸ்டையர் குக், கிரேக் கீஸ்வெட்டர், குயீண்டன் டி காக், பிராண்டன் மெக்கல்லம் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
விராட் கோலி பந்து வீசியதைத் தொடர்ந்து சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் இருவரும் வரிசையாக பந்து வீசினர். எனினும், விக்கெட் கைப்பற்றவில்லை.
