ஸ்வராஜ் டிராக்டர்களின் பிராண்ட் அம்பாசிடராக தோனிக்கு வரவேற்பு- ஆனந்த் மஹிந்திரா!
எம்.எஸ்.தோனியை ஸ்வராஜ் டிராக்டர்களின் பிராண்ட் அம்பாசிடராக ஆனந்த் மஹிந்திரா வரவேற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி விவசாயம், விளையாட்டு உபகரணங்கள், விளம்பரங்கள், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றின் மூலமாக வருடத்திற்கு ரூ.1050 கோடி வரையில் வருமானம் ஈட்டி வருகிறார். இந்த நிலையில் தான், ஆனந்த் மஹிந்திரா நிறுவனம், தோனியை தங்களது ஸ்வராஜ் டிராக்டர்களின் பிராண்ட் அம்பாசிடராக வரவேற்றுள்ளது.
விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள தோனியை மஹிந்திரா நிறுவனம் தங்களது ஸ்வராஜ் டிராக்டர்களின் பிராண்ட் அம்பாசிடராக பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இதுகுறித்து ஸ்வராஜ் டிராக்டர் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிராக்டரை வைத்திருக்கும், பயன்படுத்தும், விரும்புவரை விட ஸ்வராஜின் முகமாக இருப்பவர் தோனி.
India vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!
ஸ்வராஜ் டிராக்டர் உரிமையாளரான எம்எஸ் தோனியை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பண்ணை மைதானத்திலும் ஒரு சிறந்த இன்னிங்ஸைக் காண ஆவலாக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது. இதனை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மஹி மற்றும் மஹிந்திரா, இது ஏற்கனவே பெயரில் இருக்கும்போது, எங்கள் பாதைகள் எப்போதும் கடக்க வேண்டும் என்று அர்த்தம்! ஸ்வராஜ் குடும்பத்திற்கு மஹியை வரவேற்கிறோம் என என்னுடன் சேருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.