SA vs NED: மார்க்ரம் மிகப்பெரிய சதம்.. மில்லர் அதிரடி பேட்டிங்.! 50 ஓவரில் 370 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா
நெதர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய மார்க்ரம் 175 ரன்களை குவிக்க, 50 ஓவரில் 370 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 371 ரன்கள் என்ற கடின இலக்கை நெதர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து இடையேயான 3வது ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்க அணி:
குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ராசி வாண்டர்டசன், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், மார்கோ யான்சென், சிசாண்டா மகளா, லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷம்ஸி.
IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் தோல்விக்கு இதுதான் காரணம்..! பிளேயர்ஸ் மீது ரிக்கி பாண்டிங் செம காட்டம்
நெதர்லாந்து அணி:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடௌட், மூசா அகமது, வெஸ்லி பாரெசி, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டாம் கூப்பர், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், பால் வென் மீகெரென், விவியன் கிங்மா, ஃப்ரெட் கிளாசன்.
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக்(8) மற்றும் டெம்பா பவுமா(6) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய வாண்டர்டசன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று அதிரடியாக பேட்டிங் ஆடிய எய்டன் மார்க்ரம் சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் மாபெரும் இன்னிங்ஸ் ஆடினார் மார்க்ரம். 126 பந்தில் 17 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 175 ரன்களை குவித்தார் மார்க்ரம்.
அவருடன் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லரும் அதிரடியாக பேட்டிங் ஆடி 91 ரன்களை குவித்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஆனால் 61 பந்தில் 91 ரன்களை குவித்தார். மார்க்ரம், டேவிட் மில்லரின் அதிரடியான பேட்டிங்கால் 50 ஓவரில் 370 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 371 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை நெதர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.