கோலி, ரோகித் சர்மா வரிசையில் இடம் பிடித்த பும்ரா: பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் ஆட்டநாயகன்!

பாகிஸ்தானுக்கு எதிரான இன்று நடந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.

After Virat Kohli and Rohit Sharma, Jasprit Bumrah won POTM vs Pakistan in World Cup 2023 at Ahmedabad rsk

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12ஆவது லீக் போட்டி நடந்தது. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும், பாபர் அசாம் 49 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா 2036 ஒலிம்பிக்கை நடத்த விரும்புகிறது - இது ஒவ்வொரு இந்தியர்களின் கனவு - பிரதமர் மோடி!

பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் 16 ரன்களிலும், விராட் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 23 ஓவர்களிலேயே வெற்றி பெறும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோகித் சர்மா 86 ரன்களில் ஆட்டமிழந்து அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார்.

India vs Pakistan: பாகிஸ்தானை பந்தாடி, ரன் ரேட்டில் நம்பர் 1 இடம் பிடித்த இந்தியா – நியூசிலாந்து 2ஆவது இடம்!

எனினும் இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 300 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தார். பின்னர் வந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

கடைசியாக ஷ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி அடித்து உலகக் கோப்பையில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். அதோடு, இந்திய அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். இறுதியாக இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்க் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக 8ஆவது வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

IND vs PAK: 8ஆவது முறையாக வெற்றி - சாதனையை தக்க வைத்துக் கொண்ட இந்தியா – கௌரவத்தை காப்பாற்றிய ரோகித் சர்மா!

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 7 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் மூலமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா வரிசையில் இடம் பிடித்துள்ளார்.

 

 

ஆம், பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.

தற்போது 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios