மும்பையில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புகிறது என்று கூறியுள்ளார்.

மும்பையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பிளாக் கால்பந்து, லாக்ரோக்ஸ், பேஸ்பால், ஆகிய 5 போட்டிகளை சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில் தான் இன்று நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று இந்தியர்கள் பல ஆண்டுகளாக கனவு கண்டு வருகின்றனர்.

India vs Pakistan: பாகிஸ்தானை பந்தாடி, ரன் ரேட்டில் நம்பர் 1 இடம் பிடித்த இந்தியா – நியூசிலாந்து 2ஆவது இடம்!

உங்கள் உதவியுடன் இந்த கனவை நிறைவேற்ற விரும்புகிறோம். 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புகிறது. 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தயாராக உள்ளது. 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்று கோரியதோடு, 2029ம் ஆண்டு யூத் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் கூறினார். இந்த நாட்டில், விளையாட்டு வரைபடம் மாறும். ஒலிம்பிக், உலகக் கோப்பை போன்ற போட்டிகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதனால், இந்த நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டால் இந்தியப் பொருளாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs PAK: 8ஆவது முறையாக வெற்றி - சாதனையை தக்க வைத்துக் கொண்ட இந்தியா – கௌரவத்தை காப்பாற்றிய ரோகித் சர்மா!