ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், அடிலெய்டு, சிட்னி, ஹோபார்ட், பெர்த் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அனைத்து அணிகளுமே பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் நோக்கில், பல வீரர்களை பரிசோதித்துவருகின்றன. இதையும் படிங்க: 2020 டி20 உலக கோப்பை பட்டியலின் முழு விவரம்

அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவரும் நிலையில், உலக கோப்பையின் அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என்று ஆடம் கில்கிறிஸ்ட் ஆருடம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆடம் கில்கிறிஸ்ட், இந்திய அணி கண்டிப்பாக அரையிறுதியிலும் ஆடும், இறுதி போட்டியிலும் ஆடும். அரையிறுதிக்கு இந்திய அணியை தவிர ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் முன்னேறும். ஆனால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதை கணிக்கமுடியாது. இறுதி போட்டியின் வின்னிங் ரன் அடிக்கும் வரை அல்லது கடைசி விக்கெட்டை போடும்வரை, எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதை சொல்லமுடியாது. 

ஏனெனில் பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக உள்ளது. எனவே அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. உலக கோப்பையை வெல்ல கொஞ்சம் அதிர்ஷ்டமும் முக்கியம் என்பதால் வெற்றி பெறும் அணியை கணிக்கமுடியாது என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.