அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடங்குகிறது. தகுதிச்சுற்று, சூப்பர் 12, அரையிறுதி, இறுதி போட்டி என நான்கு சுற்றுகள் நடக்கின்றன. 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருந்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் ஆடும். 

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்றுவிட்டன. வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் முறையே 9 மற்றும் 10ம் இடத்தில் இருந்ததால் தகுதிச்சுற்றில் ஆட வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணிகள் தள்ளப்பட்டுள்ளன. 

எனவே தகுதிச்சுற்றில் இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நமீபியா, ஓமன், பப்புவா நியூ கினி ஆகிய 8 அணிகளும் தகுதிச்சுற்றில் மோதுகின்றன. இந்த 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தகுதிச்சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. 

குருப் ஏ பிரிவில் இலங்கை, பப்புவா நியூ கினி, ஓமன், அயர்லாந்து ஆகிய நான்கு அணிகளும் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய நான்கு அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த அணிகளுக்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 18ம் தேதியிலிருந்து 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த 8 அணிகளிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். ஏற்கனவே 8 அணிகள் நேரடியாக தகுதிபெற்றுள்ளன. எனவே மொத்தமாக 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் ஆடும். 

அக்டோபர் 24ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும். அதில் குருப் 1ல் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தகுதிச்சுற்றில் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பெற்ற அணி(ஏ1) மற்றும் குரூப் பி பிரிவில் இரண்டாமிடம் பெற்ற அணி(பி2) என மொத்தம் 6 அணிகள் இடம்பெறும். 

குரூப் 2ல் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் குரூப் ஏ பிரிவில் இரண்டாமிடம் பெற்ற அணி(ஏ2), குரூப் பி பிரிவில் முதலிடம் பெற்ற அணி(பி1) என மொத்தம் 6 அணிகள் இடம்பெறும். சூப்பர் 12 போட்டிகளுக்கான கால அட்டவணையை பார்ப்போம். 

சூப்பர் 12 கால அட்டவணை:

அக்டோபர் 24: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், சிட்னி

அக்டோபர் 24: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, பெர்த்

அக்டோபர் 25: ஏ1 vs பி2, ஹோபார்ட்

அக்டோபர் 25: நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மெல்போர்ன்

அக்டோபர் 26: ஆஃப்கானிஸ்தான் vs ஏ2, பெர்த்

அக்டோபர் 26: இங்கிலாந்து vs பி1, பெர்த்

அக்டோபர் 27: நியூசிலாந்து vs பி2, ஹோபார்ட்

அக்டோபர் 28: ஆஃப்கானிஸ்தான் vs பி1, பெர்த்

அக்டோபர் 28: ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், பெர்த்

அக்டோபர் 29: பாகிஸ்தான் vs ஏ1, சிட்னி

அக்டோபர் 29: இந்தியா vs ஏ2, மெல்போர்ன்

அக்டோபர் 30: இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா, சிட்னி

அக்டோபர் 30: வெஸ்ட் இண்டீஸ் vs பி2, பெர்த்

அக்டோபர் 31: பாகிஸ்தான் vs நியூசிலாந்து, பிரிஸ்பேன்

அக்டோபர் 31: ஆஸ்திரேலியா vs ஏ1, பிரிஸ்பேன்

நவம்பர் 1: தென்னாப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான், அடிலெய்டு

நவம்பர் 1: இந்தியா vs இங்கிலாந்து, மெல்போர்ன்

நவம்பர் 2: ஏ2 vs பி1, சிட்னி

நவம்பர் 2: நியூசிலாந்து vs ஏ1, பிரிஸ்பேன்

நவம்பர் 3: பாகிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ், அடிலெய்டு

நவம்பர் 3: ஆஸ்திரேலியா vs பி2, அடிலெய்டு

நவம்பர் 4: இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான், பிரிஸ்பேன்

நவம்பர் 5: தென்னாப்பிரிக்கா vs ஏ2, அடிலெய்டு

நவம்பர் 5: இந்தியா vs பி1, அடிலெய்டு

நவம்பர் 6: பாகிஸ்தான் vs பி2, மெல்போர்ன், 

நவம்பர் 6: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து, மெல்போர்ன்

நவம்பர் 7: இங்கிலாந்து vs ஏ2, அடிலெய்டு

நவம்பர் 7: வெஸ்ட் இண்டீஸ் vs ஏ1, மெல்போர்ன்

நவம்பர் 8: தென்னாப்பிரிக்கா vs பி1, சிட்னி

நவம்பர் 8: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், சிட்னி

அரையிறுதி போட்டிகள்:

சூப்பர் 12 சுற்று முடிவில், குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பெற்ற 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 

முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 11ம் தேதி சிட்னியிலும் இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 12ம் தேதி அடிலெய்டிலும் நடக்கின்றன. இறுதி போட்டி நவம்பர் 15ம் தேதி மெல்போர்னில் நடக்கிறது.