டிவி, டிஜிட்டல் ஒளிப்பரப்பாளர்கள் பாதிப்பு – 4000 கோடியாக விளம்பர வருவாய் குறைவு – சுவாமிநாதன் பத்மநாபன்!
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது விளம்பர வருவாயானது ரூ.4700 கோடியிலிருந்து ரூ.4000 கோடியாக குறைந்துள்ளது. அதற்கு உதாரணமே ஐபிஎல் 2024 தொடர் தான் என்று டேட்டா சயின்ஸ் துணை தலைவர் சுவாமிநாதன் பத்மநாபன் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3ஆவது முறையாக சாம்பியனானது. இந்த நிலையில் தான் விளம்பர வருவாயானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூ.4000 கோடியாக குறைந்துள்ளது என்று டேட்டா சயின்ஸ் துணை தலைவர் சுவாமிநாதன் பத்மநாபன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஐபிஎல் தொடரின் மூலம் வரக் கூடிய விளம்பர வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இது டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பாளர்களை வெகுவாக பாதித்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.4700 கோடியாக இருந்தது.
விவாகரத்து டிராமா - எல்லாமே சீட்டிங்: ரசிகர்களை ஏமாற்றும் ஹர்திக் பாண்டியா? ரோகித் குப்தா விமர்சனம்!
இதற்கு முக்கிய காரணம் மக்களவை தேர்தல் மற்றும் ஐபிஎல் 2024 இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றதுதான். தேர்தல் மற்றும் ஐபிஎல் இரண்டுமே அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இரண்டும் ஒன்றாக வரும் போது தேர்தலுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைகிறது. எதில் அதிக பார்வையாளர்கள் இருக்கிறார்களோ அதற்கு தான் அதிக விளம்பரங்களும், நேரங்களும் கொடுக்கப்படுகிறது. செய்தி சேனல்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் பொதுவாக தேர்தல் காலகட்டங்களில் விளம்பரச் செலவு அதிகரிப்பதை விரும்பும். இது ஐபிஎல் நிகழ்வுகளுக்கு விளம்பரத்திற்காக ஒதுக்கப்படு பெருவாரியான பங்கை குறைக்கும்.
மோடி, சச்சின், ஜெய் ஷா பெயரில் விண்ணப்பங்கள் – ஷாக்கான பிசிசிஐ!
ஐபிஎல் தொடரில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களைக் காட்டிலும் விளம்பரக் கட்டணம் அதிகம். உலகளவில் பார்க்கு போது, சூப்பர் பவுல் (பிப்ரவரி), NBA இறுதிப் போட்டிகள் (ஜூன்), உலகத் தொடர் (அக்டோபர்), மற்றும் NCAA மார்ச் மேட்னஸ் (மார்ச்-ஏப்ரல்) போன்ற அமெரிக்காவின் முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் ஜனாதிபதித் தேர்தல்களுடன் மோதல்களைத் தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதே போன்று மற்ற நாடுகளிலும் வார இறுதி நாட்களில் கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது தவிர சாம்பியன்ஸ் லீக், FA கோப்பை இறுதிப் போட்டிகள் மற்றும் EPL இறுதிப் போட்டிகள் போன்ற முக்கிய போட்டிகள் தேர்தல் மற்றும் விளையாட்டு முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக வெவ்வேறு நேரங்களில் திட்டமிடப்படுகின்றன.
இது தான் சரியான சந்தர்ப்பம் – கவுதம் காம்பீரை தட்டி தூக்குமா பிசிசிஐ?
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது விளம்பர வருவாயில் சரிவு இருந்த போதிலும் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஐபிஎல் 2024 தொடரின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பார்க் தரவு எடுத்துக்காட்டுகிறது. விளம்பர வருவாயை அதிகரிக்கச் செய்ய வேண்டுமானால் தேர்தல் மற்றும் ஐபிஎல் போன்ற விளையாட்டுகளை வெவ்வேறு நேரங்களில் நடத்த திட்டமிடுவது இரண்டிற்கும் பயனளிக்கும்.