Asianet News TamilAsianet News Tamil

Pakistan vs Sri Lanka: அறிமுக உலகக் கோப்பையிலேயே சதம் அடித்து சாதனை படைத்த அப்துல்லா ஷபீக்!

இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக உலகக் கோப்பையில் அறிமுகமான பாகிஸ்தானின் அப்துல்லா ஷபீக் அறிமுக உலகக் கோப்பையிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Abdullah Shafique Hit His 1st World Cup maiden century against Sri Lanka in 8th Match of Cricket World Cup at Hyderabad rsk
Author
First Published Oct 10, 2023, 10:30 PM IST | Last Updated Oct 10, 2023, 10:30 PM IST

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 8ஆவது லீக் போட்டி தற்போது ஹைதராபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் ஆடியது. இதில் குசால் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரமா ஆகியோரது அதிரடியான சதம் காரணமாக இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 344 ரன்கள் குவித்தது.

ENG vs BAN: வரிசை கட்டி அவுட்டான டாப் பிளேயர்ஸ் – வங்கதேசம் 227க்கு ஆல் அவுட்; இங்கிலாந்து முதல் வெற்றி!

பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடினார். ஃபகர் ஜமானுக்குப் பதிலாக இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். அவருடன் இமாம் உல் ஹக் தொடக்க வீரராக களமிறங்கினார். அவர், 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷபீக் உடன் முகமது ரிஸ்வான் களமிறங்கி ரன்கள் சேர்த்தனர்.

பாகிஸ்தானை பந்தாடி உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த மெண்டிஸ், சமரவிக்ரமா – இலங்கை 344 ரன்கள் குவிப்பு!

இதில், ஷபீக் நிதானமாக விளையாடி 103 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக தனது முதல் உலகக் கோப்பையில் சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி அறிமுக உலகக் கோப்பையிலே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக,

Pakistan vs Sri Lanka: ஒரு விக்கெட் கீப்பராக குமார் சங்கக்காரா சாதனையை முறியடித்த குசால் மெண்டிஸ்!

பாகிஸ்தானுக்காக உலகக் கோப்பை அறிமுகத்தில் அதிக ஸ்கோர்கள்:

113 - அப்துல்லா ஷபிக் vs இலங்கை, ஹைதராபாத், 2023*

82 - மொசின் கான் vs இலங்கை, ஸ்வான்சீ, 1983

78* - அசாத் ஷபீக் vs ஜிம்பாப்வே, பல்லேகலே, 2011

76 - ரமீஸ் ராஜா vs இலங்கை, ஹைதராபாத் (பாகிஸ்தான்), 1987

71 - உமர் அக்மல் vs கென்யா, ஹம்பந்தோட்டா, 2011

ஸ்குவாஷ், கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்றது – பதக்கம் வென்ற வீரர்களுடன் மோடி உரையாடல்!

உலகக் கோப்பையில் 100 சதம் அடித்த இளம் பாகிஸ்தான் வீரர்:

23 வயது 195 நாட்கள் - இமாம்-உல்-ஹக் vs வங்கதேசம், லார்ட்ஸ், 2019

23 வயது 324 நாட்கள் - அப்துல்லா ஷபிக் vs இலங்கை, ஹைதராபாத், 2023*

24 வயது 192 நாட்கள் - சலீம் மாலிக் vs இலங்கை, ஃபைசலாபாத், 1987

24 வயது 254 நாட்கள் - பாபர் அசாம் vs நியூசிலாந்து, பர்மிங்காம், 2019

ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை விற்க முடிவு – சன் டிவி, கௌதம் அதானியிடம் பேச்சுவார்த்தை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios