Asianet News TamilAsianet News Tamil

ENG vs BAN: வரிசை கட்டி அவுட்டான டாப் பிளேயர்ஸ் – வங்கதேசம் 227க்கு ஆல் அவுட்; இங்கிலாந்து முதல் வெற்றி!

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

England beat Bangladesh by 137 runs in Cricket World Cup 7th Match at Dharamsala rsk
Author
First Published Oct 10, 2023, 9:13 PM IST | Last Updated Oct 10, 2023, 9:13 PM IST

இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 7ஆவது லீக் போட்டி தரம்சாலா மைதானத்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடியது. இதில், ஜானி பேர்ஸ்டோவ் 52 ரன்களும், டேவிட் மலான் 140 ரன்களும், ஜோ ரூட் 82 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தானை பந்தாடி உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த மெண்டிஸ், சமரவிக்ரமா – இலங்கை 344 ரன்கள் குவிப்பு!

பின்னர் கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு தொடக்க வீரர் தன்ஷித் அகமது ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ கோல்டன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 9 பந்துகள் பிடித்து 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெஹிடி ஹசன் மிராஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து லிட்டன் தாஸ் உடன் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் தொடக்க வீரராக களமிறங்கிய லிட்டன் தாஸ் 66 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹீம் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே வங்கதேச அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் மட்டுமே எடுத்து 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Pakistan vs Sri Lanka: ஒரு விக்கெட் கீப்பராக குமார் சங்கக்காரா சாதனையை முறியடித்த குசால் மெண்டிஸ்!

இதன் மூலமாக இங்கிலாந்து தனது முதல் வெற்றியை பெற்றது. மேலும், உலகக் கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சு தரப்பில் ரீஸ் டாப்ளே 4 விக்கெட் கைப்பற்றினார். கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், சாம் கரண், மார்க் வுட், அடில் ரஷீத், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு அதிக வெற்றி வித்தியாசம் (ரன்கள்):

202 vs இந்தியா, லார்ட்ஸ், 1975

196 vs கிழக்கு ஆப்பிரிக்கா, பர்மிங்காம், 1975

150 vs ஆப்கானிஸ்தான், மான்செஸ்டர், 2019

137 vs வங்கதேசம், தரம்சாலா, 2023*

122 vs தென்னாப்பிரிக்கா, தி ஓவல், 1999

ஸ்குவாஷ், கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்றது – பதக்கம் வென்ற வீரர்களுடன் மோடி உரையாடல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios