ஸ்குவாஷ், கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்றது – பதக்கம் வென்ற வீரர்களுடன் மோடி உரையாடல்!
மகளிர் கிரிக்கெட், ஆண்கள் கிரிக்கெட், ஸ்குவாஷ் என்று பல போட்டிகளில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் உரையாடி வருகிறார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அபாரமான விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடி வருகிறார். சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆசிய விளையாட்டு போட்டியில், 28 தங்கம் உள்பட 107 பதக்கங்களை இந்திய அணி வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியா 107 பதக்கங்களை வென்றது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பு, 70 பதக்கங்கள் வென்றதே சிறந்த சாதனையாக இருந்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை: அதிவேக சதம் அடித்து குசால் மெண்டிஸ் சாதனை!
வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர்களின் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் மோடி உரையாடி வருகிறார்.
ஷாருக்கானின் ஜவான் கெட்டப்பில் வந்து டயலாக் பேசும் ஷிகர் தவான் – வைரலாகும் வீடியோ!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் சாதித்த விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவும், எதிர்காலப் போட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியக் குழுவின் விளையாட்டு வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள், தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் விவகாரங்கள் விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.