ஷாருக்கானின் ஜவான் கெட்டப்பில் வந்து டயலாக் பேசும் ஷிகர் தவான் – வைரலாகும் வீடியோ!

இந்திய அணியின் ஷிகர் தவான், ஜவான் கெட்டப்பில் வந்து டயலாக் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Shikhar Dhawan came with Jawan Shahrukh Khan style rsk

ஷிகர் தவான் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில் 167 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான், 6793 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 143 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 17 சதமும், 39 அரைசதமும் அடித்துள்ளார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர், ஆசிய விளையாட்டு போட்டி, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை என்று எதிலும் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

ENG vs BAN: உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த டேவிட் மலான், ரூட் அரைசதம் – இங்கிலாந்து 364 ரன்கள் குவிப்பு!

என்னதான் ஷிகர் தவான் இந்திய அணியில் இல்லாவிட்டாலும் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பையை வீட்டிலிருந்தபடியே பார்த்துள்ளார். மேலும், இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வந்த ஜவான் படத்தில் வரும் கெட்டப்பில் வந்த ஷிகர் தவான் அந்தப் பட டயலாக்கை பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Shubman Gill: ஒரு இரவு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை – டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட சுப்மன் கில் ஹோட்டலில் ஓய்வு!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios