சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். பேட்டிங்கில் இதற்கு முன்னர் செய்யப்பட்ட பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். 

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரண்டிலுமே நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழும் விராட் கோலி, ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார். கடந்த பத்தாண்டில் அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பியுள்ளார் கோலி.

கோலி தலைசிறந்த வீரராக திகழும் நிலையில், கோலிக்கு நிகரான வீரர்கள் பாகிஸ்தானிலும் இருப்பதாகவும், ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மோசமான செயல்பாடுகளால் அவர்கள் எல்லாம் காணாமல் போவதாகவும் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். 

Also Read - நியூசிலாந்தில் ரோஹித் சர்மாவுக்கு காத்திருக்கும் சவால்.. முன்கூட்டியே எச்சரித்த சச்சின் டெண்டுல்கர்

இதுகுறித்து பேசியுள்ள அப்துல் ரசாக், விராட் கோலி அருமையான பேட்ஸ்மேன். அவர் தலைசிறந்த வீரர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் பிசிசிஐ-யின் ஆதரவு இல்லாமல் கோலியால் ஜொலிக்க முடியாது. பிசிசிஐ, கோலியை வெகுவாக ஆதரிக்கிறது. கிரிக்கெட் வாரியம் அதுமாதிரி ஆதரித்தால்தான் ஒரு வீரரால் வெற்றிகரமாக திகழ முடியும். பிசிசிஐ அளிக்கும் ஆதரவு, கோலிக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. அந்த ஆதரவுதான் அவர் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுக்க காரணமாக திகழ்கிறது.

பாகிஸ்தானில் கூட கோலியை விட சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகக்கூடிய அளவிற்கான திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அவர்கள் புறக்கணிக்கப்படுவதுதான் சோகமான சம்பவம். கோலிக்கு பிசிசிஐ அளிக்கும் ஆதரவிற்கு வெகுமதியாக, அவர் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்து கொடுக்கிறார் என்று அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். 

Also Read - நியூசிலாந்துக்கு எதிரா படுமோசமான டி20 ரெக்கார்டு.. இந்திய அணிக்கு காத்திருக்கும் கடும் சவால்

எப்போதுமே ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக எதையாவது பேசும் அப்துல் ரசாக், இப்போதும் அப்படித்தான் பேசியுள்ளார். அவர் சொன்ன விஷயம் சரிதான் என்றாலும், அந்த கேப்பில் பாகிஸ்தானில் கோலியைவிட சிறந்த பேட்ஸ்மேன்கள் இருப்பதாக தங்கள் நாட்டு புகழ்பாடியுள்ளார். அண்மையில், பும்ராவெல்லாம் தனக்கு ஒரு பவுலரே இல்லை என்று கூறி ரசிகர்களிடமும் நெட்டிசன்களிடமும் ரசாக் வாங்கிக்கட்டியது குறிப்பிடத்தக்கது.