Asianet News TamilAsianet News Tamil

Pakistan National T20: ஸ்ட்ரெச்சர் இல்லாததால் காயமடைந்த ஷதாப் கானை அலேக்காக முதுகில் தூக்கி சென்ற சக வீரர்!

ராவல்பிண்டி மற்றும் சியால்கோட் இடையிலான தேசிய டி20 கோப்பை போட்டியின் போது, ​​பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் காயம் அடைந்த நிலையில், அவரை சக வீரர் ஒருவர் தனது முதுகில் சுமந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

A Player carried the injured Shadab Khan on his shoulders due to lack of stretcher in Pakistan National T20 Cup at Karachi rsk
Author
First Published Dec 5, 2023, 6:04 PM IST

இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற பாகிஸ்தான் விளையாடிய 9 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் தொல்வியை கண்டது. இதையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பாபர் அசாமிற்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அஃப்ரிடி டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிலையில் நீங்கள் இருந்தால் உதவி செய்யுங்கள் – டேவிட் வார்னர் வேண்டுகோள்!

உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் 14 ஆம் தேதி முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரையில் நடக்கிறது. பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக ஷான் மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இடம் பெறாத பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரான ஷதாப் கான் தேசிய டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார்.

Gerald Coetzee Wedding Photos: ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக காதலியை கரம் பிடித்த கெரால்டு கோட்ஸி!

இதில், ராவல்பிண்டி மற்றும் சியால்கோட் இடையிலான தேசிய டி20 கோப்பை போட்டியின் போது, ​​ஷதாப் கான் காயம் காலில் காயம் அடைந்துள்ளார். கராச்சியில் 3ஆம் தேதி நடந்த போட்டியின் போது இஸ்லாமாபாத் கேப்டனான ஷதாப் கான் பீல்டிங் போது பந்தை தடுக்க முயற்சித்த போது பந்தை மிதித்த நிலையில், அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – ஒரே நாளில் 3 வெள்ளி பதக்கங்களை வென்ற இந்தியா!

அவரை பரிசோதனை செய்த பிசியோதெரபிஸ்ட் அவருக்கு கணுக்காலில் ஐஸ்பேக் வைத்துள்ளார். இது குறித்து ஷதாப்பின் பாகிஸ்தான் சூப்பர் லீக் உரிமையாளரான இஸ்லாமாபாத் யுனைடெட் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது தேசிய டி20 கோப்பையில் ஷதாப் கான் அற்புதமாக பந்து வீசினார். அவர், 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். பீல்டிங்கின் போது அவரது கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார். எனினும், அவருக்கு பெரிதாக பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்ணை வீட்டில் வளர்க்கும் குதிரைக்கு பாசமாக உணவு கொடுக்கும் தோனி – வைரலாகும் வீடியோ!

கணுக்கால் காயமடைந்த நிலையில், நடக்க கூட முடியாத நிலையில் சக வீரர் ஒருவர் அவரை தனது தோளில் தூக்கிக் கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios