இதே நிலை நீடித்தால் தமிழக அமைச்சரவையை புழல் சிறையில் தான் நடத்த வேண்டும் - அதிமுக விமர்சனம்

செந்தில் பாலாஜி பொன்முடி என இதே நிலை நீடித்தால் அமைச்சரவை கூட்டத்தை புழல் சிறையில் தான் நடத்த வேண்டும் என அதிமுக கடுமையான விமர்சனம்.

if the situation continued in tamil nadu cm mk stalin will conduct a cabinet meeting at puzhal jail says puducherry aiadmk

புதுச்சேரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

இதற்கு புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் காவல்துறை டிஜிபி யிடம் அதிமுகவினர் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

யார் யாருக்கோ வாலாட்டி பதவி பெற்ற லியோனி முதல்வர் ரங்கசாமியை விமர்சிப்பதா? தமிழிசை காட்டம்

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமி எடப்பாடி பழனிசாமி பற்றி திண்டுக்கல் லியோனி அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி இடம் புகார் மனு அளித்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தெரிவித்தார்.

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூவுக்கு தீபம் ஏற்றி வழிபட்ட குடும்பத்தினர்

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் குறுக்கு வழியில் சம்பாதிப்பவர்கள், ஊரை அடித்து உலையில் போடுபவர்கள், அரசு சொத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொள்பவர்கள், மொள்ளமாரி தனம் செய்பவர்கள் எல்லாம் அமைச்சர்களாக உள்ளனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தது பொன்முடி கைது செய்யப்படுவார். அதன்பிறகு அடுத்த நான்கு அமைச்சர்களும் கைது செய்யப்படுவார்கள். அதன் பிறகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவை கூட்டத்தை புழல் சிறையில் தான் நடத்த வேண்டும் என அன்பழகன் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios