ரஜினி, ரோஜா விவகாரம்; பதிலளிக்க மறுத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் குஜராத், மகாராஷ்டிரா தின விழாவின் போது தாண்டியா நடனமாடி மகிழ்ந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரஜினி, ரோஜா விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்துச் சென்றார்.

governor tamilisai soundararajan celebrate maharashtra day in puducherry

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில்  குஜராத்  மற்றும் மகாராஷ்டிரா தின  விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் ரங்க்லீலா கலை குழுவினர் தாண்டியா நடனமாடினார்கள். இதில் கலந்து கொண்ட பெண்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசை முன்னிலையில் நடனமாடினார்கள். இதனை தொடர்ந்து பேசிய  துணைநிலை ஆளுநர் தமிழிசை, மதம், மொழி, கலாச்சாரம் என வேறுபட்டாலும் நாம் அனைவரும் இந்தியர்களே. ஆனால் அரசியலுக்காக எந்த வேற்றுமையும் ஏற்படுத்தாமல் தேச ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மக்களுடன் நடனமாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இங்கு கோலாட்டம், அங்கு தாண்டியா என்கிறோம். இதுவே தேச ஒற்றுமைக்கு உதாரணம்.

பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிகிழமை இரண்டு மணி நேர வேலையில் ஓய்வு சலுகை என்பது பெண் அடிமைதனம் என்ற திமுக, காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. இதில் பெண் அடிமை தனம் இல்லை. அவர்கள் வீட்டில் சென்று பார்க்க வேண்டும். கோவிலுக்கு போவார்கள் ஆனால், போகவில்லை என்பார்கள். அதே போன்று தான் பெண்கள் அடிமைதனம் இல்லை என்பார்கள், அவர்கள் வீட்டில் பெண்களை எப்படி வைத்துள்ளார்கள் என்பது தெரியும் என தமிழிசை பதிலளித்தார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தாண்டியா நடனமாடிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி ஆளுநர் மாளிகை உறுதி தன்மை இல்லையா...? என கேட்டதற்கு ஆளுநர் உறுதியாக இருக்கார். கட்டிடடம் தான் பழைய கட்டிடடம் என்பதால் பழமை மாறாமல் சீர் செய்யப்பட இருக்கிறது என்றார் தமிழிசை..

ரஜினியை ரோஜா விமர்சித்து வருவது குறித்து கேட்டதற்கு அந்த விவகாரத்திற்குள் போகவிரும்பவில்லை என தமிழிசை பதிலளிக்க மறுத்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios