முதல்வன் பட பாணியில் சாக்கடையில் விழுந்து ஓட்டம்; இளைஞரை குளிக்க வைத்து அழைத்துச் சென்ற காவலர்கள்
புதுச்சேரியில் காவல் துறையினருக்கு பயந்து சாக்கடையில் விழுந்து ஓட்டம் பிடித்த கஞ்சா வியாபாரியை காவல் துறையினர் குளிக்க வைத்து அழைத்துச் சென்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் அந்தந்த காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை பிடித்து கைது செய்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து கஞ்சாவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது மட்டும் இல்லாமல் தலைமறைவாக உள்ள கஞ்சா குற்றவாளிகளை பிடிக்க காவல் துறையினர் தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பெரியார் நகரைச் சேர்ந்த அரவிந்தன் என்பவன் தனது கூட்டாளிகளுடன் 45 அடி ரோடு சாலையோரம் உள்ள வாய்க்காலில் கஞ்சா அடித்துக் கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சென்னை மாநகராட்சி பள்ளியில் முட்டை உள்ளிட்ட மளிகை பொருட்களை விற்று கல்லா கட்டும் ஊழியர்கள்
அதன் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது அவர்களைக் கண்ட அரவிந்தன் மற்றும் அவனின் கஞ்சா கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது அரவிந்தன் அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து எழுந்து சென்றுள்ளான். உடல் முழுவதும் கழிவு படிந்த நிலையில் தப்பி ஓடினான். இதில் கூட்டாளிகள் வேறு ஒரு புறம் தப்பி ஓடிய நிலையில் அரவிந்தனை மட்டும் காவல் துறையினர் துரத்திச் சென்றனர்.
அப்போது திடீரென காணாமல் போன அரவிந்தனை காவல் துறையினர் அப்பகுதியில் தேடினர். அப்போது அப்பகுதியில் பூட்டப்பட்டிருந்த நீதிபதி வீட்டிற்குள் குற்றவாளி அரவிந்தன் பதுங்கி இருப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலையா? உண்மை நிலவரம் என்ன? காவல்துறை கொடுத்த விளக்கம்..!
இதன் பேரில் காவல் துறையினர் அவனை பிடிக்க சென்ற போது, தன்னை பிடித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன். தன்னை விட்டு விடுங்கள் என மிரட்டியுள்ளார். மேலும், தன்னைத்தானே அருகில் இருந்து சுவற்றில் முட்டி காயப்படுத்தி கொண்டார். இதனை அடுத்து கஞ்சா குற்றவாளி அரவிந்தனை காவல் துறையினர் பிடித்து அவன் மீது இருந்த கழிவுகளை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி அரவிந்தனை பிடித்து சென்றனர்.
சாக்கடையில் விழுந்து உடல் முழுதும் சாக்கடை படிந்த படி இருந்த அரவிந்தனை போலீசார் பிடித்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.