MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலையா? உண்மை நிலவரம் என்ன? காவல்துறை கொடுத்த விளக்கம்..!

நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலையா? உண்மை நிலவரம் என்ன? காவல்துறை கொடுத்த விளக்கம்..!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Jul 26 2023, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
tirunelveli

tirunelveli


இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல்நிலைய சரகம் அப்புவிளை, சாமிதாஸ் நகரை சேர்ந்த பலவேசம் மகன் கன்னியப்பன் என்பவர் 23.07.20234ம் தேதி இரவு திசையன்விளை காவல்நிலையம் ஆஜராகி கொடுத்த புகார் மனுவில் தனது மகன் முத்தையா, வேறு சமுதாயத்தை சார்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாகவும், 23.07.2023-ம் தேதி அன்று இரவு தனது மகன் ஓடக்கரை பாலம் அருகில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகவும், தனது மகன் காதலித்த பெண்ணின் குடும்பத்தை சார்ந்தவர்கள் ஜாதி வெறியில் கொலை செய்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க கேட்டு கொடுத்த மனுவின் பேரில் உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க;-  உல்லாச வாழ்க்கை ஆசைப்பட்டு கள்ளக்காதல் ஜோடி செய்கிற வேலையை பாத்தீங்களா.. அலேக்கா தூக்கிய போலீஸ்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இவ்வழக்கு சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் அவர்கள் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட தனிப்படையினரின் விசாரணையில், இறந்து போன முத்தையா என்பவர் அப்புவிளையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் தங்கையை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்ததாகவும், அதனை அவரது தங்கை சுரேஷிடம் சொல்லி அழுதுள்ளதாகவும், ஏற்கனவே சுரேஷின் தங்கை இறந்து போன முத்தையாவின் உறவினரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, அது சம்பந்தமான வழக்கு நடைபெற்று வருவதாகவும், இதனால், ஒரு மாதத்திற்கு முன்பு சுரேஷ் முத்தையாவை எச்சரித்துள்ளார். அதன் பின்பும் 22.07.2023-ம் தேதி மதியம் சுரேஷின் தங்கையை முத்தையா கிண்டல் செய்து தன்னை காதலிக்க வற்புறுத்தியதாகவும். 

34

அதனை அவரின் தங்கை சுரேஷிடம் அழுது கொண்டே சொன்னதாகவும், இதனால் அவன் உயிருடன் இருக்கும்வரை தங்கையிடம் பிரச்சனை செய்து கொண்டிருப்பான் என்று எண்ணி தனது உறவினர்களான மதியழகனிடமும், ஜெயபிரகாஷிடமும் தெரிவித்து மூவருமாக சேர்ந்து 23.07.2023-ம் தேதி இரவு சம்பவ இடத்தில் சென்றபோது முத்தையாவும் அவன் நண்பரும் பேசிக் கொண்டிருந்ததாகவும், முத்தையாவிடம் சென்று சுரேஷ் தனது தங்கையை கிண்டல் செய்தது பற்றி கேட்டபோது பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவர்கள் மூவரும் தாக்கியதில் முத்தையாவுடன் நின்றிருந்த அவரது நண்பர் சிறு காயத்துடன் ஓடி விட்டதாகவும், முத்தையாவிற்கு குத்து காயங்கள் ஏற்பட்டு இறந்ததாகவும், தெரியவந்தது. 

இதையும் படிங்க;- உங்க கிட்ட தனியா பேசணும்! காட்டுப்பகுதிக்கு கூட்டி சென்று கதையை முடிக்க பார்த்த மனைவி! கணவர் தப்பியது எப்படி?

44

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, இரண்டு எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டும், ஒரு எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விசாரணையில் இவ்வழக்கில் மரணமடைந்தவரும் மற்றும் அனைத்து எதிரிகளும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களுக்கிடையிலான தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக இக்கொலை நடைபெற்றுள்ளது தெரிய வருகிறது. கொலையுண்ட நபரின் தந்தை கன்னியப்பன் என்பவர் அவரது மனுவில் தனது மகனின் மரணம் ஜாதிய வெறியில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருப்பினும் விசாரணையில் இது ஜாதிய படுகொலை இல்லை என தெரிய வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நெல்லை
கௌரவக் கொலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்
Recommended image2
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Recommended image3
Breaking: தூத்துக்குடி மாணவி கொ**லை வழக்கு..! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடிa
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved