MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • உல்லாச வாழ்க்கை ஆசைப்பட்டு கள்ளக்காதல் ஜோடி செய்கிற வேலையை பாத்தீங்களா.. அலேக்கா தூக்கிய போலீஸ்.!

உல்லாச வாழ்க்கை ஆசைப்பட்டு கள்ளக்காதல் ஜோடி செய்கிற வேலையை பாத்தீங்களா.. அலேக்கா தூக்கிய போலீஸ்.!

உல்லாச வாழ்க்கையை ஆசைப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடி அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 25 2023, 02:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பெருமாள் கோவில் காலனி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மாதையன். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், இவரது மனைவி சுந்தராம்பாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஒரு அரசு வங்கியில் பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் 5-ம் தேதி சுந்தராம்பாள் தனது மகனை பார்ப்பதற்காக திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் சுந்தராம்பாள் வீட்டில் நுழைந்து, அங்கிருந்த விலை உயர்ந்த எல்.இ.டி டிவி மற்றும் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். ஊருக்கு திரும்பி சுந்தராம்பாள் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்வத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சுந்தராம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். 

34
arrest 2

arrest 2

இதில் கொள்ளை சம்பவம் நடந்த அன்று அந்த வீட்டிற்குள் நுழைந்தது சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தத சக்திவேல் (24) மற்றும் ஓமலூரை அடுத்த தாசநாயக்கன்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மனைவி சியாமளாதேவி (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

44

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சக்திவேலுக்கும், சியாமளா தேவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும், உல்லாச வாழ்க்கையை அனுபவிப்பதற்காக, இந்த கள்ளக்காதல் ஜோடி சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீடுகளுக்குள் நுழைந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.  இதையடுத்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு
Recommended image2
Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Recommended image3
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved