MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • உங்க கிட்ட தனியா பேசணும்! காட்டுப்பகுதிக்கு கூட்டி சென்று கதையை முடிக்க பார்த்த மனைவி! கணவர் தப்பியது எப்படி?

உங்க கிட்ட தனியா பேசணும்! காட்டுப்பகுதிக்கு கூட்டி சென்று கதையை முடிக்க பார்த்த மனைவி! கணவர் தப்பியது எப்படி?

கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 25 2023, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கார்த்திக் (31). இவரது மனைவி பிரியா (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரியாவின் தங்கை வீடு கோவை மாவட்டம் கஞ்சிகோணம்பாளைத்தில் உள்ளது. இங்கு அவர் அடிக்கடி வந்து சென்ற போது பிரியாவுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த டிரைவர் தினேஷ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
illegal love

illegal love

நாளடைவில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபித்துக்கொண்டு பிரியா 2 குழந்தைகளுடன் தங்கையின் வீட்டிற்கு வந்தார். இதனால், பிரியாவுக்கு தினேசுடன் உல்லாசமாக இருக்க ரொம்ப வசதியாக போனது. 

35
us murder

us murder

இந்த தகவல் கார்த்திக்கிற்கு தெரிய வந்ததை அடுத்து அவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை மறந்து விட்டு ஒன்றாக வாழலாம் என கூறியுள்ளார். இதுகுறித்து பிரியா தனது கள்ளக்காதலன் தினேஷிடம் கூறினார். உன்னுடைய கணவர் உயிரோடு இருக்கும் வரை நான் இருவரும் ஒன்றாக வாழவிடமாட்டார். ஆகையால், அவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். 

45
crime

crime

அதன்படி தனது கணவர் கார்த்திக்கை தொடர்பு கொண்ட மனைவி பிரியா உங்களிடம் பேச வேண்டும் என கோவைக்கு அழைத்தார். இதனையடுத்து, கோவைக்கு வந்த கணவரை பிரியா காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது, அங்கு கத்தியுடன் மறைந்திருந்த தினேஷ் கார்த்திக்கை கத்தியால் குத்த முயன்ற போது கையால் தடுத்துள்ளார். இதனால், அவரது கையில் கத்திக்குத்து விழுந்தது. வலிதாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டுள்ளார். 

55

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதை பார்த்த தினேசும், பிரியாவும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கார்த்திக் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற பிரியா, அவரது கள்ளக்காதலன் தினேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்
Recommended image2
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Recommended image3
Breaking: தூத்துக்குடி மாணவி கொ**லை வழக்கு..! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடிa
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved