சென்னை மாநகராட்சி பள்ளியில் முட்டை உள்ளிட்ட மளிகை பொருட்களை விற்று கல்லா கட்டும் ஊழியர்கள்
சென்னை மண்ணடியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்காக கொடுக்கப்படும் சத்துணவுகள் பொருட்கள், முட்டை, பருப்பு, கொண்டை கடலை உள்ளிட்ட மளிகை பொருட்களை ஊழியர்கள் திருடி விற்கும் அவலம்.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்ணடி பகுதி அங்கப்பன் தெரு பகுதியில் செயல்பட்டு வரும் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான ஏழை எளிய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.
தமிழக அரசின் சார்பில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. வாரத்தில் மூன்று நாட்களுக்கு முட்டைகள் கொடுக்கப்படுகிறது. அதேபோல் சுண்டல் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்களும் கொடுக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்காக வழங்கப்படும் முட்டை, கடலை, அரிசி, பருப்பு, எண்ணெய், கொண்டை கடலை உள்ளிட்ட மளிகை பொருட்கள் பள்ளியின் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு பணத்தை எடுத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி; சோகத்தில் கணவன் விபரீத முடிவு
இதனை பள்ளியில் பணி புரியும் ஊழியர்கள் திருடி அருகில் இருக்கும் மளிகை கடையில் விற்று வருகிறார்கள். கடந்த பல மாதங்களாக இந்த திருட்டு நடைபெற்று வருவதாகவும், தற்போது ஊழியர்கள் திருடிச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளிய மாணவர்கள் படிக்கக்கூடிய மாநகராட்சி பள்ளியில் இது போன்ற திருட்டுகள் நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் சிக்கி கை துண்டான நிலையில் உயிரிழப்பு