மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்; மேடையில் இருந்து கீழே விழுந்த திமுக அமைப்பாளர் படுகாயம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில அமைப்பாளர் சிவா மேடையில் இருந்து இறங்கும்போது கால் இடறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
மணிப்பூர் மாநில கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய மோடி அரசை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது. அதன்படி புதுச்சேரியில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்திய, மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி மாநில திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்றது.
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டு மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
புதுச்சேரி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சட்டசபை நோக்கி பேரணி; தடுப்புகள் மீது ஏறி போராட்டம்
தொடர்ந்து உரையாற்றி விட்டு திமுக மாநில அமைப்பாளர் சிவா கீழே இறங்கும் போது கால் இடறி திடீரென்று கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்தது. இதனை அடுத்து சுற்றி இருந்த தொண்டர்கள் அவரை உடனடியாக மீட்டு இந்திரா காந்தி சிலை சதுக்கம் பின்புறம் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தலையில் பலத்த காயத்துடன் சிவா சிகிச்சை பெற்று வருகிறார்.
பொள்ளாச்சி கடை வீதியில் பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு