புதுச்சேரி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சட்டசபை நோக்கி பேரணி; தடுப்புகள் மீது ஏறி போராட்டம்
புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகள் மீது ஏறி சட்டசபைக்குள் நுழைய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டு பொதுப் பணித்துறையில் 2553 பேர் வவுச்சர் ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். அதன் பிறகு 2016ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி தேர்தல் துறையால் 2553 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தற்போது உள்ள என். ஆர். காங்கிரஸ் ஆட்சியிலும் மீண்டும் பணி வழங்க வேண்டி பொதுப்பணித்துறை ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தேர்தல் துறையால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பொதுப்பணித்துறையில் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அவர்கள் பணிக்கு அமர்த்த ப்படவில்லை.
தனது ஒரே மகனை சினிமா பாணியில் கொன்றுவிட்டு வழக்கறிஞர் மனைவியுடன் தற்கொலை; குமரியில் சோகம்
இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பெருந்திரல் பேரணியாக புறப்பட்டனர். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் சட்டசபை நோக்கி வந்த பேரணியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு அண்ணாசாலை, நேரு வீதி, மிஷின் வீதி வழியாக சட்டமன்றம் முன்பு வந்தடைந்தனர்.
அப்போது சட்டசபையை நோக்கி புறப்பட்ட உழியர்களை காவல் துறையினர் தடுத்தனர். இருப்பினும் தடுப்பு கட்டை மீது ஏறி மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றவாளிகளை மதம் சார்ந்து பார்க்கக் கூடாது; இஸ்லாமிய அமைப்புகளுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை
இது குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் கூறும்போது, முதலமைச்சர் மீண்டும் பணி வழங்கப்படும் என்று உறுதி அளித்தும் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுகின்றனர். எனவே இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.