திண்டுக்கல்லில் தூங்கிக்கொண்டிருந்த பிரபல ரௌடி துடிக்க துடிக்க படுகாலை

திண்டுக்கல் அருகே மாலப்பட்டியில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த ரௌடியை மர்ம நபர்கள் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

young man killed by unknown persons in dindigul district

திண்டுக்கல் மாவட்டம் மாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 29 ). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. முனீஸ்வரன் மீது திண்டுக்கல் நகர் வடக்கு, திண்டுக்கல், திண்டுக்கல் தாலுகா உள்ளிட்ட காவல் நிலையங்களில் நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இந்த நிலையில் முனீஸ்வரன் வீட்டில் நேற்று மாலை நேரத்தில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 8க்கும் அதிகமான மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு முனீஸ்வரனை சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். 

தனது ஒரே மகனை சினிமா பாணியில் கொன்றுவிட்டு வழக்கறிஞர் மனைவியுடன் தற்கொலை; குமரியில் சோகம்

இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை மற்றும் தடைய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த பொருட்களைக் கொண்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும், கொள்ளையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளை மதம் சார்ந்து பார்க்கக் கூடாது; இஸ்லாமிய அமைப்புகளுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios