யார் இந்த இசுதான் கத்வி.? பத்திரிகையாளர் டூ ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. குஜராத் தேர்தல் பரபர!
குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதான் கத்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முதல்வர் வேட்பாளராக இசுதான் கத்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் வேட்பாளர்:
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய இணைப் பொதுச் செயலாளராகவும், அதன் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார் இசுதான் கத்வி. குஜராத்தில் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக ஆம் ஆத்மி நடத்திய சர்வேயில் இசுதான் கத்வி 73% வாக்குகளைப் பெற்றார்.
யார் இந்த இசுதான் கத்வி ?:
இசுதான் கத்வி அரசியலில் நுழைவதற்கு முன்பு, ஒரு பிரபலமான குஜராத்தி பத்திரிகையாளர் மற்றும் தொகுப்பாளராக இருந்துள்ளார். அவரது இரவு 8 - 9 மணி நேர பிரைம் டைம் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று கூறப்படுகிறது. அது எந்தளவுக்கு என்றால், சுமார் 1 மணி நேர நிகழ்ச்சியை 1.30 மணி நேரமாக நீட்டிக்கும் அளவுக்கு மாறியது.
இதையும் படிங்க..ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளர் இசுதான் கத்வி.. அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
பத்திரிகையாளர்:
இவர் குஜராத் மக்களிடையே பிரபலமான நபராக இருக்கிறார். பிரபல குஜராத்தி பத்திரிகையாளர் என்பதை தாண்டி, அவரது பிரபலமான தூர்தர்ஷன் நிகழ்ச்சியான ‘யோஜனா’ மூலம் குஜராத் மக்களிடையே எளிதில் சென்றடைந்தார் என்பதே இவரது புகழுக்கு முக்கிய காரணம் என்றே கூறலாம். மற்றொரு பிரபல தனியார் சேனலில், கிரவுண்ட் ரிப்போர்டிங் செய்தபோது அவர் குஜராத்தில் மேலும் புகழ் பெற்றார்.
குஜராத் முதல்வர் வேட்பாளர்:
அவரது நடத்திய செய்தி நிகழ்ச்சியில் குஜராத்தின் டாங் மற்றும் கபரடா தாலுகாக்களில் ரூ.150 கோடி சட்டவிரோத மோசடியை அம்பலப்படுத்தியது இவரை அனைத்து மட்டங்களிலும் இவரை பிரபலமாக்கியது. பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது.
குஜராத் சட்டமன்ற தேர்தல்:
8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. குஜராத்தில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் ஆம் ஆத்மி கட்சி களத்தில் இறங்கியுள்ளது. அதே வேளையில் குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றாலும், அடுத்தபடியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி எதிர்க்கட்சியாக ஆக வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் ஒரு மதத்திற்கு முன்பு இருந்தே பிரச்சாரம் செய்து வருவதால், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க..கேட்டது 50 இடம்! கிடைச்சது 3 மட்டும்.. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு குறைந்த இடங்களில் அனுமதி கொடுத்த காவல்துறை
இதையும் படிங்க..2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.. 18 மாசம் ஆச்சு! முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி