ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளர் இசுதான் கத்வி.. அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதான் கத்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு பூபேந்திர படேல் முதல்வராக உள்ளார். தற்போதைய குஜராத் சட்டசபையின் காலம் என்பது 2023 பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியும், 2வது கட்ட தேர்தல் டிசம்பர் மாதம் 5 ம் தேதியும் நடக்கும். மொத்தம் 182 தொகுதிகள் உள்ள நிலையில் 89 தொகுதிகளில் முதல் கட்டமாகவும், 93 தொகுதிகளுக்கு 2ம் கட்டமாகவும் ஓட்டுப்பதிவு நடக்கும்.
இதையும் படிங்க..கேட்டது 50 இடம்! கிடைச்சது 3 மட்டும்.. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு குறைந்த இடங்களில் அனுமதி கொடுத்த காவல்துறை
முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 5ம் தேதியும், 2ம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ம் தேதியும் தொடங்கும். ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடக்கும். பாஜக,காங்கிரஸ்,ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். அதன்படி, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதான் கத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி சார்பில் நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணம் இதுதான்.. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல் !!
இதையும் படிங்க..2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.. 18 மாசம் ஆச்சு! முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி