குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணம் இதுதான்.. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல் !!
குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணத்தை அரசு வழக்கறிஞர் குஜராத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோர்பி நகரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மச்சு நதியின் குறுக்கே 1879ஆம் ஆண்டு 230 மீட்டர் நீளத்தில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டது.
சுற்றுலாத்தலமாக கருதப்படும் இந்த பாலம் புனரமைப்பு பணிக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட நிலையில், பணிகள் முடிந்து கடந்த 26ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. பாலத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் மட்டுமே நிற்க முடியும் என கூறப்படும் நிலையில், 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் பாரம் தாங்க முடியாமல் கேபிள் அறுந்து விழுந்ததாக கூறப்பட்டது. இதனால் ஏராளமானோர் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர்.
இதையும் படிங்க..தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடிச்சு ஊத்த போகுது கனமழை.. மக்களே உஷார் !!
நீச்சல் தெரிந்த சிலர், தண்ணீரில் நீந்தியபடி கரை சேர்ந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் என பலர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த நிலையில், மீட்பு படை வீரர்கள் படகுகளில் சென்று மீட்டனர். எனினும் தற்போது வரை 100க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பாலத்தைப் புதுப்பித்த ஓரேவா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேரை போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, கைதுசெய்யப்பட்டவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, புதிய தரையின் எடை காரணமாக பாலத்தின் பிரதான கேபிள் அறுந்துவிட்டதாக தடயவியல் நிபுணர்கள் கூறுவதாக குஜராத் அரசு வாதிட்டது. அதாவது, பாலத்தின் கேபிள்கள் புதுப்பிக்கப்படாமல், தரையை மட்டும் மாற்றியதால், நான்கு அடுக்கு அலுமினியத்தால் பாலத்தின் எடை அதிகரித்தது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எடையின் காரணமாக தரை தளத்திற்கான தாள்கள் மற்றும் கேபிள் அறுந்துவிட்டன என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இதையும் படிங்க..சிறையில் உல்லாசம்.! அமைச்சருக்கு 60 கோடி கொடுத்த சுகேஷ் சந்திரசேகர் - அதிர்ச்சியில் ஆம் ஆத்மி
இதையும் படிங்க..தமிழ் மொழியை காப்பாற்றும் பாஜக! எல்லாமே பொய்.. அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விட்ட சவால் !