கேட்டது 50 இடம்! கிடைச்சது 3 மட்டும்.. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு குறைந்த இடங்களில் அனுமதி கொடுத்த காவல்துறை

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழகத்தில் 3 இடங்களில் மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

TN Police has given permission for RSS rally in only 3 places in Tamil Nadu

தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை காரணமாக பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

TN Police has given permission for RSS rally in only 3 places in Tamil Nadu

இதையும் படிங்க..தமிழ் மொழியை காப்பாற்றும் பாஜக! எல்லாமே பொய்.. அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விட்ட சவால் !

அப்போது காவல்துறையின் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில்,  தமிழகத்தில் வருகிற நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்திலும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது. வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளது’ என்று வாதிடப்பட்டது.

TN Police has given permission for RSS rally in only 3 places in Tamil Nadu

அப்போது காவல்துறை தரப்பில், தற்போதைய சூழல் காரணமாக 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக உள்ளோம்.ஆனால் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது’ என்று தெரிவிக்கப்பட்டது. பிறகு பேசிய நீதிபதி, உளவுத்துறை அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்க வேண்டுமா வேண்டாமா என உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை வரும் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க..சிறையில் உல்லாசம்.! அமைச்சருக்கு 60 கோடி கொடுத்த சுகேஷ் சந்திரசேகர் - அதிர்ச்சியில் ஆம் ஆத்மி

இதையும் படிங்க..குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணம் இதுதான்.. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios