தமிழகத்தில் கொரோனா பீதி காரணமாக திருமண விழாக்கள் நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக தடை விதித்துள்ளார். 

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் கொத்துக்கொத்தாக உயிர்களை காவு வாங்கி வருகிறது. சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஒரு மாதமாக ருத்ரதாண்டவம் ஆடிவந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது தலைத்தூக்க தொடங்கியுள்ளது. சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில்  இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதையும் படிங்க;- கள்ளக்காதலியை நண்பணுக்கு விருந்தாக்கி கொடுமை... வீடியோ எடுத்து வரிசை கட்டி பலாத்காரம் செய்த காமக் கொடூரர்கள்..!

இந்நிலையில், மத்திய அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு அரசுத் துறைகள் அதிகாரிகளுடன் முதல்வர் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். 

இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் மனைவியையும்... கள்ளக்காதலியையும் சமாளித்த அரசு ஊழியர்... இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், சினிமா திரையரங்குகள், இரவு நேர கிளப்புகள், நீச்சல்குளங்கள், அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கும் அடுத்த ஒருவாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நம் மாநிலத்திற்கும், நம் மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிப்பதை கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் நிலையங்களிலும், ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

அத்துடன் முக்கியமாக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது. அவ்வாறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கூட குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்டது போக, புதிய நிகழ்ச்சிகள் எதுவும் மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறுவதை திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.