அரசு குடியிருப்பில் கள்ளக்காதலியுடன் ஜாலியாக இருந்துவிட்டு ஓட்டம் பிடித்த சுற்றுலா துறை அதிகாரி அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் யுவராஜ் (40). மனைவி ரேகா, ஒரு குழந்தையுடன், ராமேஸ்வரத்தில், வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சென்னையில் யுவராஜ் பணியாற்றிய போது, அங்கு பணிபுரிந்த ஊழியரின் மனைவியான கவிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கவிதாவை தன் மனைவி எனக்கூறி, ராமேஸ்வரம் தமிழ்நாடு ஓட்டலில் உள்ள ஊழியர் குடியிருப்பில் தங்கவைத்துள்ளார். மனைவியை தங்க வைத்துள்ள வீட்டுக்கும், அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால், சக ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் நடந்து கொண்டார். 

இந்நிலையில், திடீரென கவிதாவுடன் யுவராஜ் மாயமானார். 13-ம் தேதி, வேலைக்கு சென்ற கணவர், வீட்டிற்கு வராததால், அவரது மனைவி ரேகா, ஓட்டலில் விசாரித்தார். அப்போது தான், அவருடன் குடியிருப்பில், இதுவரை தங்கியிருந்தது, கள்ளக்காதலி என அனைவருக்கும் தெரியவந்தது. 
இதனையடுத்து, கணவரை கண்டுபிடித்து தருமாறு, 21-ம் தேதி, ராமேஸ்வரம் மகளிர் காவல் நிலையத்தில் ரேகா புகார் அளித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சென்னை சுற்றுலாத்துறை அலுவலகம், ராமேஸ்வரம் தமிழ்நாடு ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, யுவராஜை, இடைநீக்கம் செய்து, சுற்றுலாத் துறை உத்தரவிட்டுள்ளது.