மயக்க மருத்து கலந்த சாக்லெட் கொடுத்து நண்பரின் மனைவியை கூட்டு பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை விருகம்பாக்கம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தீபா (26). இவரது கணவர் தச்சு வேலை செய்வதால் அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இந்நிலையில், தீபாவின் கணவர் தச்சு வேலை காரணமாக கடந்த ஜூலை மாதம் வெளியூர் சென்று இருந்தார். அப்போது, கணவரின் நண்பரான வினோத்குமார்  வீட்டிற்கு வந்து சாக்லெட் கொண்டு வந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயக்க நிலையில் சென்றுவிட்டேன். பிறகு கண்விழித்து பார்த்த போது, நான் நிர்வாணமாக இருந்ததும், கழுத்தில் இருந்த செயினையும் மிரட்டி பறித்து சென்றுவிட்டதாக கதறியபடி கணவரிடம் கூறியுள்ளார். 

இது தொடர்பாக உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத்குமாரை அதிரடியாக கைது செய்தனர். போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவித்தார். தீபாவின் கணவர் தச்சு வேலை செய்வதால் அடிக்கடி வெளியூர் சென்று தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது, கணவரின் நண்பர் வினோத்குமார் அடிக்கடி வீட்டிற்கு வந்து போனதால் தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலமாக மாறியது.

கணவர் வெளியூர் சென்ற நேரத்தில் இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். பணம் தேவைப்படும் போதெல்லாம் கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதலனுக்கு கொடுத்து வந்தார். இந்நிலையில், வினோத்குமார் நண்பர் சதீஷ் தீபாவை அணுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதற்கு ஏற்பாடு செய்யும் படியும் வினோத்குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால், இதற்கு தீபா ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார் என தெரிவித்தார். இந்நிலையில், கணவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த வினோத் மயக்க மருந்து கொடுத்த சாக்லெட்டை தீபாவுக்கு கொடுத்துள்ளார். கள்ளக்காதலன் ஆசையாக கொடுத்ததால் தீபாவும் வாங்கி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்துள்ளார். 

இதனையடுத்து, தனது நண்பரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தீபா வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். மயக்க நிலையில் இருந்த தீபாவை சதீஷ்குமார் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அதை வீடியோவாக பதிவு செய்துகொண்டார். அதன்பிறகு தீபா கண்விழித்து பார்த்த போது நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கழுத்தில் இருந்த 3 சவரன் நகையையும் எடுத்து சென்றுவிட்டனர். 

இதற்கிடையே வேலைக்கு சென்ற கணவன் ஓரிரு நாளில் வீட்டிற்கு வர இருப்பதால் அதற்குள் 3 சவரன் செயினை திருப்பி கொடுக்கும்படி தனது கள்ளக்காதலன் வினோத்குமாரிடம் தீபா கேட்டுள்ளார். ஆனால், வினோத்குமாரால் செயினை திருப்பி கொடுக்க முடியவில்லை. எனவே, தீபாவுக்கும் கள்ளக்காதலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீடியோ காண்பித்து மிரட்டியுள்ளார். பின்னர் வினோத்குமார், சதீஷ்குமார் ஆகியோர் பலமுறை தீபாவை பலாத்காரம் செய்து வந்துள்ளனர். அதோடு இல்லாமல், இருவரும் தனது நண்பர்களுடனும் ஒன்றாக இருக்கும்படி கூறி வீடியோவை காட்டி மிரட்டியுள்ளனர். வேறு வழியின்றி தீபா அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.