என்னைக்குமே நாங்க இறை நம்பிக்கையில் தலையிட மாட்டோம்.. பாஜகவை ஜர்க் ஆக்கிய முதல்வர் ஸ்டாலின்.!
சாதிக்கு அத்தகைய சமாதானத்தைச் சொல்ல முடியாது சாதி என்பது தமிழினத்தைப் பிளவுபடுத்தும் முதலாவது சக்தியாக இருக்கிறது. அதனால்தான் "சாதியை ஒழித்தல் ஒன்று தமிழை வளர்த்தல் மற்றொன்று' என்று பாவேந்தர் பாடினார். அதனால்தான். “தமிழால் இணைவோம்" என்பதை நமது முழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
சாதியால் மதத்தால் தமிழர்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகமாகி வரும் சூழலில் நாம் அனைவரும் ஒன்றுசேர்வதற்கு, நம்மை ஒருங்கிணைக்கும் ஆற்றல் தமிழ்மொழிக்கு மட்டும்தான் இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை ஆண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் உலகின் மிக மூத்த மொழிகளில் முதல் மொழியான தமிழுக்கு சொந்தக்காரர்கள் நாம். ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் தமிழினம். 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கைகளில் வாழ்கிறார்கள். தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும் தமிழ்நாடு தான் தாய் வீடு. உலகம் முழுவதும் பறந்து விரிந்து வாழும் இனம் தமிழினம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் கண்டத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்.
இதையும் படிங்க;- பணம் கொடுத்தால் மு.க.ஸ்டாலின் கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம்..! இபிஎஸ் அணியை கலாய்க்கும் டிடிவி தினகரன்
தமிழையும், தமிழ் இனத்தையும் காக்கும் அரசாக திமுக விளங்குகிறது. தமிழ் மொழியை காத்திட பல்வேறு நடவடிக்கைள் எடுத்துள்ளோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என தமிழர்களின் நலனுக்காக பாடுபடுவது என்ற குறிக்கோளோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் குறு தொழில் செய்ய மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க ஏற்பாடு செய்யப்படும். வெளிநாடு வாழ் வாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளேன். சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.
இதையும் படிங்க;- மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !
தமிழ்நாடு என பெயர் சூட்டியது திமுக அரசு தான். ஸ்ரீ என்பதற்கு பதிலாக திரு, ஸ்ரீமதி என்பதற்கு பதிலாக திருமதி என கொண்டு வந்தது ததிமுக ஆட்சி தான். 1938 முதல் இன்று வரை தமிழ் காப்பு போராட்டங்கள் திமுகவால் நடத்தப்பட்டன. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இரு மொழிக் கொள்கையை நிறைவேற்றியது திமுக அரசு தான். தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது திமுக அரசு தான். மதம் என்று நான் சொல்லும்போது யாருடைய அறைநம்பிக்கையையும் நான் சொல்லவில்லை. இறைநம்பிக்கை என்பது அவரவர் சிந்தனை, விருப்பம் உரிமை. அதில் ஒருநாளும் தலையிடமாட்டோம். அதே நேரத்தில் தமிழர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக மதத்தை பயன்படுத்துவதைதான் நாம் எதிரக்கிறோம்.
சாதிக்கு அத்தகைய சமாதானத்தைச் சொல்ல முடியாது சாதி என்பது தமிழினத்தைப் பிளவுபடுத்தும் முதலாவது சக்தியாக இருக்கிறது. அதனால்தான் "சாதியை ஒழித்தல் ஒன்று தமிழை வளர்த்தல் மற்றொன்று' என்று பாவேந்தர் பாடினார். அதனால்தான். “தமிழால் இணைவோம்" என்பதை நமது முழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
இதையும் படிங்க;-திமுக கட்சி விளம்பரங்களில் புறக்கணிக்கப்படும் உதயநிதி ஸ்டாலின்..! அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்
சாதியால் மதத்தால் தமிழர்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகமாகி வரும் சூழலில் நாம் அனைவரும் ஒன்றுசேர்வதற்கு, நம்மை ஒருங்கிணைக்கும் ஆற்றல் தமிழ்மொழிக்கு மட்டும்தான் இருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்லாயிரம் மைல் கடந்தும் இன்று நாம் ஒன்றாகக் கூடியிருக்கிறோம் என்றால் தமிழர் என்ற உணர்வோடு நாம் கூடி இருக்கிறோம். நம்மை நாடுகள் பிரிக்கலாம். நிலங்கள் பிரிக்கலாம்! ஆனாலும், மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு அந்த மொழியை வளர்ப்போம்! தமிழினத்தைக் காப்போம்! உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது நானே வந்து சந்திப்பேன் நீங்களும் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என்ற அன்பான அழைப்புடன் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன் என்றார்.