அந்த ஒரு வேற்றுமையினால் தமிழ்நாடு இந்திய சராசரியை விட பல மடங்கு முன்னேறி இருக்கிறது. ஏனென்றால் 1920  ஆம் ஆண்டு திராவிடக்கட்சிகளின் தந்தையான நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களுக்கு சட்டரீதியாக வாக்குரிமை அளிக்கப்பட்டது. 

பெண்கள் கல்வியைத்தாண்டி தொழில்துறையில் தடம் பதிக்க வேண்டும் என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை உரையாற்றானார் அப்போது அவர் பேசுகையில், ஒரு அரசியல்வாதி என்பது பல இடங்களில் பெருமைக்குரிய ஒரு தலைப்பாக இல்லாமல் அச்சம் உருவாக்குவதாக, தவறான திசையில் செல்கிற ஒன்றாக இருக்கிற சூழ்நிலை இன்றைக்கு நாட்டில் இருக்கிறது. 

ஆனால் என்னைப்பொறுத்தவரைக்கும், எங்கள் குடும்பத்தை பொறுத்தவரைக்கும்,எங்கள் தலைவரை பொறுத்தவரைக்கும் நாங்கள் அரசியல் செய்வது எல்லாம் ஒரே காரணத்திற்காகத்தான் அதன் அடிப்படை கொள்கை, தத்துவம், சுயமரியாதை, சமூக நீதி ,எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வாய்ப்பு ,பெண்களுக்கு சம உரிமை இந்த மாதிரி தத்துவங்களை சட்டமாக அதனை திட்டமாக கொண்டு வந்து நாட்டை மாற்றுவதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம். சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி இங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. எந்த ஒரு சமுதாயத்திலும் பெண்களுக்கு எந்த அளவிற்கு கல்வி,சொத்துரிமை ,வேலை வாய்ப்பு கிடைக்கிறதோ அதுதான் அந்த சமுதாயத்தின் எதிர்காலத்தை, பாதையை தீர்மானிக்கும்.

இதையும் படியுங்கள்: "நிறுத்துங்க.. எனக்கு இந்தி புரியாது.. ஆங்கிலத்துல பேசுங்க".. அலறவிட்ட கனிமொழி.. ஆடிப்போன மத்திய அமைச்சர்.

அந்த ஒரு வேற்றுமையினால் தமிழ்நாடு இந்திய சராசரியை விட பல மடங்கு முன்னேறி இருக்கிறது. ஏனென்றால் 1920 ஆம் ஆண்டு திராவிடக்கட்சிகளின் தந்தையான நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களுக்கு சட்டரீதியாக வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதேபோல் கட்டாயக்கல்வி ஆண்களுக்கும் பெண்களுக்கும் 1920 ல் சட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு நம் மாநிலம் இந்த நிலையை அடைந்து இருக்கிறது. அத்தகைய மகளிர் கல்லூரிக்கு சென்று ஊக்கமளிக்க்க வேண்டும் என்பதற்காக இங்கு வருகை தந்தேன். இந்த மாதிரி போட்டிகள் மிக முக்கியமானவை ஏனென்றால் 90 முதல் 95 சதவிகிதம் உங்களது கற்றல் பழக்கம் உள்ளிட்டவை கல்லூரிக்கு உள்ளேயே இருக்கும். 

மற்றவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்ற வகையிலும் உங்களது பார்வையை விரிவாக்குகிற வகையிலும் ,திறமைகள் ,கொள்கை ,திறன் பலரிடம் உள்ளது என்பதை கண்டறியவும்,கல்லூரிகளை தாண்டி நட்பை உருவாக்கிடவும் இது போன்ற போட்டிகள் வாய்ப்பாக இருக்கின்றன.39 கல்லூரிகளில் இருந்து போட்டிகளில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.போட்டியில் கலந்து கொள்ள இருப்பவர்கள் இந்த மேடையில் ஏற்படும் அச்ச உணர்வை தாண்டி வந்து இருப்பதோடு இங்கு யார் வெற்றி பெற்றாலும் பங்கேற்பாளர்கள் அனைவரும் வெற்றியாளர்கள் என வாழ்த்துகிறேன் .தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி முடிந்து வந்தவர்கள் 50 சதவிகிதம் பெண்கள் இன்றைக்கு மக்கள் தொகையிலும் 50 சதவிகிதம் மேல் பெண்கள். கல்லூரிக்கு செல்கிற போது அந்த கணக்கு மாற ஆரம்பித்து இருக்கிறது .தனியார் பள்ளிகளில் படிக்கிற 96 சதவிகிதம் பெண்கள் கல்லூரியில் சேர்கிறார்கள். 

இதையும் படியுங்கள்: கூலி தொழிலாளியை கட்டி வைத்து அடித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. அரசியலுக்கே வரல அதுக்குள்ள இப்படியா.?

ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 46 சதவிகிதம் பேர் தான் கல்லூரியில் சேர்கிறார்கள் என்ற ஏற்றத்தாழ்வு தெரிய ஆரம்பிக்கிறது. கடிமான போட்டியில் தேர்வு செய்யப்படுகிற கல்லூரிகளில் கூட பட்டப்படிப்பை முடித்துவிட்டு அதற்கு மேல் தொழிலோ,வேலை வாய்ப்பிலோ சேராமல் வீட்டோடு இருந்து விடுகிறார்கள். என்னுடைய கோரிக்கை எல்லாம் தமிழ்நாடு முன்னேற்றம் அடைய நீங்கள் எந்த அளவு கல்வி கற்பது முக்கியமோ அதனை விட முக்கியம் ஏதாவது ஒரு தொழில் துறையில் நீங்கள் தடம் பதிக்க வேண்டும். நீங்கள் உங்கள் சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் உதவி செய்து பொருளாதார அளவில் வளர்ச்சி அடைந்து நாட்டின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் துணை நிற்க வேண்டும் .

பெண் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை இந்த அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.பெண்கள் அதிகமாக பணியாற்றும் தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. அதனை தொடர்ந்து செய்வோம். கல்வி கற்பதோடு நின்று விடாமல் வேலைவாய்ப்பில் தொழிற் துறையில் பங்கேற்று உற்பத்தி திறனை உயர்த்துகிற வகையில் செயலாற்றுங்கள் என பேசினார்.