அதற்கு மத்திய பொதுத்துறை, விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஹிந்தியில் பதிலளிக்க முற்பட்டார். அப்போது இடைமறித்த கனிமொழி நீங்கள் இந்தியில் பேசினால் அது எனக்கு புரியாது, உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும், நீங்கள் ஆங்கிலத்தில் பேசினால் சரியாக இருக்கும், நான் ஆங்கிலத்தில் தான் கேள்வி கேட்டேன் அதற்கு நீங்கள் ஆங்கிலத்திலேயே பதில் அளியுங்கள் எனக் கூறினார்.
நாடாளுமன்றத்தில் தான் எழுப்பிய கேள்விக்கு இந்தியில் பதில் கூறிய அமைச்சரை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இடைமறித்து ஆங்கிலத்தில் பேச வைத்துள்ளார். இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மாநில சுயாட்சி, மொழி உணர்வு, இந்தி எதிர்ப்பு போன்ற போராட்டங்களின் மூலம் வளர்ந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இயக்கம் தமிழக மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் இருப்பதற்கு அந்த இயக்கத்தின் இத்தகைய கொள்கைகளும் கோட்பாடுகளுமே காரணம்.
பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் கனிமொழி என இது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி போன்றோர் நாடாளுமன்றத்திலும் கூட அடிக்கடி நிரூபித்துக் காட்டி வருகின்றனர். ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர், கனிமொழியை இந்தியில் பேசுமாறு கூற தமிழ்நாட்டில் வேலை செய்கிற உங்களுக்கு தமிழில் பேச தெரியாதா என அப்போதே கனிமொழி அந்த நபருக்கு பதிலடி கொடுத்தார். இது அப்போது வைரலானது. தமிழக மக்களால் மதிக்கப்படும் எம்.பிக்களில் ஒருவரான கனிமொழியை அந்த நபர் இந்தியல் போச கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததது, பின்னர் விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கனிமொழியிடம் மன்னிப்பும் கோரியதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இதையும் படியுங்கள்: என்ன எதுக்கு டார்க்கெட் பண்றீங்க? யார் தடுத்தாலும் நடத்தியே காட்டுவேன்.. சவால் விடும் அன்னபூரணி.!

எப்போதும் தமிழ், தமிழ் மொழி மீது பற்றும் நம்பிக்கையும் மிக்கவராக கனிமொழி இருந்து வருகிறார். தமிழ்நாட்டு உரிமைக்காக, தமிழருக்கோ, தமிழ் மொழிக்கோ எங்கு தீங்கு நடக்கினும் அதை துணிவுடன் எதிர்கொள்ள தயங்காதவராக கனிமொழி இருந்து வருகிறார். மறைந்த முதல்வர் கருணாநிதியைப் போலவே கொள்கையில் உறுதி கொண்டவர் கனிமொழி, இந்நிலையில்தான் நாடாளுமன்றத்தில் தான் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விக்கு இந்தியில் பேசிய மத்திய அமைச்சரை இடைமறித்து ஆங்கிலத்தில் பேச வைத்துள்ளார் அவர். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது, அந்த வகையில் இன்று ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து விவாதம் எழுந்தது. அது தொடர்பாக கனிமொழி கருணாநிதி எம்பி என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்: மார்ச் 20 , நினைவிடத்தில் அரசியல் முடிவை அறிவிக்கிறார் சசிகலா.? உற்சாகத்தில் ஆதரவாளர்கள்.. அலறும் இபிஎஸ்.
அதற்கு மத்திய பொதுத்துறை, விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஹிந்தியில் பதிலளிக்க முற்பட்டார். அப்போது இடைமறித்த கனிமொழி நீங்கள் இந்தியில் பேசினால் அது எனக்கு புரியாது, உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும், நீங்கள் ஆங்கிலத்தில் பேசினால் சரியாக இருக்கும், நான் ஆங்கிலத்தில் தான் கேள்வி கேட்டேன் அதற்கு நீங்கள் ஆங்கிலத்திலேயே பதில் அளியுங்கள் எனக் கூறினார். அதற்கு மொழிபெயர்ப்பு சேவை கிடைக்கும் என அமைச்சர் பியூஸ் கோயல் கூறியபோதும், இல்லை இல்லை ஆங்கிலத்தில் பதில் அளித்தால் நன்றாக புரியும் என கனிமொழி மீண்டும் உறுதியாக கூறினார். எனவே தனது பதிலை பியூஸ் கோயல் ஆங்கிலத்தில் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போலவே கொள்கையில் பிடிவாதமும், வைராக்கியமும் மிக்கவர் கனிமொழி என பாராட்டி வருகின்றனர்.
