சென்னை பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்சர் என்கிற அனிஷ் (29) இவர் விஜய் மக்கள் இயக்கம் பல்லாவரம், சென்னை மேற்கு மாவட்ட தொண்டரணி பொருளாளராக உள்ளார். இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார், அந்தக் கடையில் அதே குதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக தெரிகிறது.
பல்லாவரத்தில் கூலித் தொழிலாளி ஒருவரை விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மற்றும் அவரது நண்பர்கள் கட்டிப்போட்டு அடித்து உதைத்துள்ள சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் இன்னும் அரசியலுக்கே வரவில்லை அதுக்குள்ள அவரது ஆதரவாளர்கள் செய்யும் அட்ராசிட்டியை பாருங்கள் என பலரும் இந்த சம்பவத்தை விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தை போலவே நீண்ட நாட்களாக அரசியல் கனவில் மிதந்து வருகிறார் நடிகர் விஜய். அதனால் தான் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனது விஜய் மக்கள் மன்றத்தினர் தேர்தலில் போட்டியிட கிரீன் சிக்னல் காட்டினார். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விஜய் மக்கள் மன்ற வேட்பாளர்கள் வெற்றியும் பெற்றனர். இந்நிலையில் எதிர்வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து விஜய் தீவிர அரசியலில் இறங்குவார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இதற்கிடையில் அவரது மக்கள் மன்றத்தை சேர்ந்த சிலர் அரசியல் போர்வையில் அட்ராசிட்டி ஈடுபடும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அந்தவகையில் சென்னை பல்லாவரத்தில் கூலி தொழிலாளி ஒருவரை விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: முத்தலாக், பாபர் மசூதி, ஹிஜாப் என எல்லாவற்றிலும் இசுலாமியர்களுக்கு இரண்டகம்.. தலையில் அடித்து கதறும் சீமான்.

சென்னை பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்சர் என்கிற அனிஷ் (29) இவர் விஜய் மக்கள் இயக்கம் பல்லாவரம், சென்னை மேற்கு மாவட்ட தொண்டரணி பொருளாளராக உள்ளார். இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார், அந்தக் கடையில் அதே குதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் அனிஷ், பாலாஜிக்கு சரியாக ஊதியம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அனிசின் 3 செல்போன்கள் மற்றும் 10 ஆயிரத்து 500 ரூபாய் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாலாஜியும் மூன்று நாள் வேலைக்கு வரவில்லை, இதனால் தனது உடமைகளை பாலாஜிதான் திருடியிருக்கக் கூடும் என சந்தேகித்த அனீஸ் தனது நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து பாலாஜியை தேடினார்.
பாலாஜி பம்மல் பகுதியில் இருப்பதாக அந்த கும்பல் கண்டு பிடித்தது, காணாமல் போன தனது செல்போன் மற்றும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு பாலாஜியை அந்த கும்பல் சரமாரியாக அடித்து உதைத்தது. செல்போன் மற்றும் பணத்தை தான் எடுக்கவில்லை என பாலாஜி கூறியும் அந்த கும்பல் விடவில்லை, பாலாஜியின் இரு கைகளையும் கட்டி போட்டு தாங்கள் வைத்திருந்த உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் பாலாஜி சரமாரியாக தாக்கியது. பாலாஜி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது அந்த கும்பல் பாலாஜியை விடவில்லை.

இதையும் படியுங்கள்: மார்ச் 20 , நினைவிடத்தில் அரசியல் முடிவை அறிவிக்கிறார் சசிகலா.? உற்சாகத்தில் ஆதரவாளர்கள்.. அலறும் இபிஎஸ்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பாலாஜியை குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார் பாலாஜி தாக்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆராய்ந்ததில் விஜய் மக்கள் இயக்கம் பல்லாவரம் செங்கை மேற்கு மாவட்ட தொண்டரணி பொருளாளராக இருக்கும் அன்சர் என்ற அனிஷ், மற்றும் பல்லாவரம் பகுதியை சேர்ந்த அபிப் ரகுமான், மனோஜ், முகேஷ், ராஜேஷ், மதன், சரத், சீனு, பாலகுமார், நிசார் அகமது ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி கொலை வெறி தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
