Asianet News TamilAsianet News Tamil

தீபாவளி குடும்பத்துடன் கொண்டாடும் நாளா? இல்லை குடியோடு கொண்டாடும் நாளா? இறங்கி அடிக்கும் வானதி சீனிவாசன்.!

வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்கள் வரும் என கூறுவது தான் "தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர துடிக்கும் அரசின் நோக்கமா?

Vanathi srinivasan condemns Launch of new beer introduce in tasmac shops tvk
Author
First Published Nov 11, 2023, 8:04 AM IST | Last Updated Nov 11, 2023, 8:04 AM IST

மகளிர் பற்றி அக்கறை காட்டுவதாக கூறும் திமுக அரசு அதே மகளிர் வாழ்க்கையில் விளையாடுவது சரியா? என வானதி சீனிவாசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு மதுபான கடைகளை எடுத்து நடத்தி வருகிறது. இந்த கடைகளில் சூப்பர் ஸ்டிராங், கோல்டு பிரீமியம் லெகர் பீர், கிங்பிஷர் உள்ளிட்ட பல்வேறு பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தண்டர்போல்ட் ஸ்டிராங், காட்பாதர் என்கிற இரு புதிய பீர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்துக்குள் மேலும் 5 புதிய பீர் வகைகளை டாஸ்மாக் மதுபான கடைகளில் அறிமுகப்படுத்த இருக்கின்றன. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;- இதே பொழப்பா போச்சு! நீதிபதி முதல் சாமானியன் வரை அனைவரையும் தரைக்குறைவாக பேசும் RS.பாரதி! வானதி சீனிவாசன்!

Vanathi srinivasan condemns Launch of new beer introduce in tasmac shops tvk

இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- நாடெங்கும் மக்கள் தீபாவளி கொண்டாட தயாராகி வரும் வேளையில். அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கு  ஊழியர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள் கொடுத்து வருகின்றனர். 

ஆனால் தமிழக மக்களுக்கு தமிழக அரசின் கொடுத்த தீபாவளி பரிசு என்ன தெரியுமா? " 2 வகை பீர்கள்" இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் பார்க்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்கள் வரும் என கூறுவது தான் "தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர துடிக்கும் அரசின் நோக்கமா?

இதையும் படிங்க;- உடலுறவு குறித்து முதல்வர் நிதிஷ்குமார் சர்ச்சை பேச்சு.. வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள் எங்க போனீங்க.. பாஜக.!

Vanathi srinivasan condemns Launch of new beer introduce in tasmac shops tvk

இது தான் திராவிட அரசின் சாதனைகளா?  தீபாவளி என்பது குடும்பத்துடன் கொண்டாடப்படும் நாளா? இல்லை குடியோடு கொண்டாடப்படும் நாளா ? மகளிர் பற்றி அக்கறை காட்டுவதாக கூறும் திமுக அரசு அதே மகளிர் வாழ்க்கையில் விளையாடுவது சரியா? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios