Asianet News TamilAsianet News Tamil

இதே பொழப்பா போச்சு! நீதிபதி முதல் சாமானியன் வரை அனைவரையும் தரைக்குறைவாக பேசும் RS.பாரதி! வானதி சீனிவாசன்!

 நாய்க்கறி உண்ணும் நாகாலாந்து மக்களே சுரணையுடன் ரவியை துரத்தி, அந்த மாநிலத்தை விட்டு ஓட ஓட விரட்டினார்கள். அப்போ உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களுக்கு எந்த அளவு சொரணை இருக்க வேண்டும் என்பதை ஆளுநர் மறந்துவிடக்கூடாது.

RS Bharathi is demeaning everyone from judge to common man.. Vanathi Srinivasan tvk
Author
First Published Nov 7, 2023, 11:28 AM IST | Last Updated Nov 7, 2023, 11:39 AM IST

ஒரு மாநில மக்களை இழிவுபடுத்திய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். வேண்டுமென்றே தமிழக அரசை வம்புக்கு இழுக்கிறார். தாம் ஒரு கருத்தை உதாரணத்திற்காக சொல்கிறேன் யாரும் தப்பா நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டு நாய்க்கறி உண்ணும் நாகாலாந்து மக்களே சுரணையுடன் ரவியை துரத்தி, அந்த மாநிலத்தை விட்டு ஓட ஓட விரட்டினார்கள்.

இதையும் படிங்க;- சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்பாரா? ராஜினாமா செய்வாரா? இறங்கி அடிக்கும் நாராயணன் திருப்பதி!

RS Bharathi is demeaning everyone from judge to common man.. Vanathi Srinivasan tvk

அப்போ உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களுக்கு எந்த அளவு சொரணை இருக்க வேண்டும் என்பதை ஆளுநர் மறந்துவிடக்கூடாது.  நாகாலாந்தில் இருந்து ரவி துரத்தப்பட்டதை வடகிழக்கு மாநில மக்கள் தீபாவளிப் பண்டிகையைப் போல கொண்டாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவரது பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகிறது. இந்நிலையில், திமுகவினர் தொடர்ந்து  மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், பின்னர் ஏதாவது ஒரு விளக்கம் கொடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். 

RS Bharathi is demeaning everyone from judge to common man.. Vanathi Srinivasan tvk

இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- திமுகவினர் தொடர்ந்து  மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், பின்னர் ஏதாவது ஒரு விளக்கம் கொடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிபதி முதல் சாமானியன் வரை அனைவரையும் தரக்குறைவாக பேசி வருகிறார்.  

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

RS Bharathi is demeaning everyone from judge to common man.. Vanathi Srinivasan tvk

ஆளுநர் ஆர்.என் ரவியை விமர்சனம் செய்வதாக கூறி  ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்களையும் தரக்குறைவாக பேசியுள்ளார்.  நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், என கூறியிருப்பதை  வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு மாநில மக்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ். பாரதியை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதை இண்டி கூட்டணி தலைவர்கள் வரவேற்கிறார்களா?  இல்லை என்றால் இன்னும் அவரைகண்டிக்காதது ஏன்? எனவும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios